வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் : ஜோ ரூட் சதம் அடித்து அசத்தல்

பிரிட்ஜ்டவுன், இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் இந்திய நேரப்படி நேற்று இரவு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிராவ்லி ரன் ஏதும் எடுக்காத நிலையில் நடையை கட்டினார். … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து : கேரளா-ஹைதராபாத் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜாம்ஷெட்பூர் (13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி), ஐதராபாத் (11 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி), ஏ.டி.கே.மோகன் பகான் (10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வி), கேரளா பிளாஸ்டர்ஸ் (9 வெற்றி, 7 தோல்வி, 4 டிரா) ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.  அரைஇறுதியில் … Read more

ரஞ்சி கோப்பை; 880 ரன்கள் குவித்து கால்இறுதிக்கு தகுதி பெற்ற ஜார்கண்ட் அணி!

கொல்கத்தா, ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஜார்கண்ட்- நாகாலாந்து அணிகள் இடையிலான கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணி 880 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.  பின்னர் ஆடிய நாகாலாந்து முதல் இன்னிங்சில் 289 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அடுத்து 591 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஜார்கண்ட் அணி நேற்றைய கடைசி நாளில் 6 விக்கெட்டுக்கு 417 ரன்கள் எடுத்திருந்த போது டிராவில் முடித்துக் … Read more

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பஸ் மீது மும்பையில் தாக்குதல்

மும்பை, 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் 27-ந்தேதி எதிர்கொள்கிறது. இதற்காக, டெல்லி அணியின் வீரர்கள் தற்போதே மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் பயணிப்பதற்காக அந்த அணி சார்பில் சொகுசு பஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பஸ் தற்போது மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ளது. … Read more

பெண்கள் உலகக்கோப்பை; இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

மவுன்ட் மாங்கானு,  நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இன்றைய போட்டியில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.  இதன்படி இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய யாஷ்டிகா பாட்டியா 8 ரன்னிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் 1 ரன்னிலும் … Read more

வரலாறு படைக்குமா ஆஸ்திரேலிய அணி; போராடும் பாகிஸ்தான்- உச்சகட்டப் பரபரப்பில் கராச்சி டெஸ்ட்

கராச்சி, பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள கராச்சி டெஸ்டில் பாகிஸ்தான் அணி 506 ரன்கள் இலக்கை நோக்கி ஆடுகிறது. கடைசி நாளில் ஆஸ்திரேலிய பவுலர்கள் மிரட்டுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான கராச்சியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 556 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 148 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. இருப்பினும் ‘பாலோ-ஆன்’ … Read more

புது பொலிவு பெறும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்! கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரலாம்

சென்னை, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியிலிருந்து, 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைதானம் விரிவாக்கம் செய்யப்பட்டால் கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் ரூ.139 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது. மைதானத்தின் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தலுக்கு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் … Read more

மீண்டும் ரெய்னா..!! ஐ.பி.எல். தொடரில் புதிய அவதாரம்..?!

புதுடெல்லி,  15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரெய்னாவை தக்கவைக்க முன்வரவில்லை.  இந்த சூழலில் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த ஜேசன் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 100 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனை

பெங்களூரு, தனது அபார பந்துவீச்சின் மூலம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் அஸ்வின், தற்போது புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.  அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 14 போட்டிகளில் 71 விக்கெட் மற்றும் நடப்பு தொடரில் 7 டெஸ்டில் 29 விக்கெட் என மொத்தம் 21 போட்டிகளில் 100 விக்கெட் எடுத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்த மிகப்பெரிய மைல்கல்லை … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து அரைஇறுதி: கேரளா பிளாஸ்டர்ஸ்-ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை

பனாஜி, 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜாம்ஷெட்பூர் (13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி), ஐதராபாத் (11 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி), ஏ.டி.கே.மோகன் பகான் (10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வி), கேரளா பிளாஸ்டர்ஸ் (9 வெற்றி, 7 தோல்வி, 4 டிரா) ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.  கோவாவில் … Read more