சீக்கிய மத குரு கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி என்கவுண்ட்டரில் பலி

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா உள்ளது. இதன் தலைவராக பாபா தர்செம் சிங் என்பவர் இருந்து வந்தார். கடந்த மாதம் 28-ந்தேதி பாபா தர்செம் சிங் குருத்வாராவுக்குள் அமர்ந்திருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் பாபா தர்செம் சிங் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனிடையே சீக்கிய மத குருவை சுட்டுக்கொலை செய்த … Read more

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: பாகிஸ்தான் அணியில் முகமது அமிர், இமாத் வாசிம் சேர்ப்பு

லாகூர், நியூசிலாந்து கிரிக்கெட் அணி வருகிற 14-ந் தேதி முதல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் மூன்று டி20 போட்டிகள் முறையே ராவல்பிண்டியில் வருகிற 18, 20, 21-ந் தேதிகளிலும், கடைசி இரு ஆட்டங்கள் லாகூரில் 25, 27-ந் தேதிகளிலும் நடக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தடையை அனுபவித்த வேகப்பந்து வீச்சாளர் … Read more

பாகிஸ்தான்: மசூதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து.. போலீஸ்காரர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள மசூதியில் நேற்று இரவு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். 5 போலீஸ்காரர்கள் உள்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மசூதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள், தொழுகை நடைபெற்றபோது தங்களுக்கு … Read more

காங்கிரஸ் புகார்: மராட்டிய முதல்-மந்திரி அலுவலகத்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

மும்பை, மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் அரசு இல்லமான ‘வர்ஷா’ பங்களா மும்பை மலபார்ஹில் பகுதியில் உள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் அரசு பங்களாவில் அரசியல் கூட்டங்கள் எதுவும் நடத்தப்படக்கூடாது என கூறப்படுகிறது. இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடந்த சனிக்கிழமை வர்ஷா பங்களாவில் உள்ள அலுவலக கூட்ட அரங்கில் தனது கட்சி மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்திய காட்சிகள் செய்தி சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகின. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் … Read more

ராஜஸ்தான் அணியின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போடுமா குஜராத்? இன்று பலப்பரீட்சை

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் வலம் வருகிறது. ராஜஸ்தான் அணி 20 ரன் வித்தியாசத்தில் லக்னோவையும், 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவையும் அடுத்தடுத்து சாய்த்தது. ஒவ்வொரு ஆட்டத்திலும் வெவ்வேறு வீரர் … Read more

காசாவின் ரபா நகரை கைப்பற்றியே தீருவோம்: இஸ்ரேல் பிரதமர் சூளுரை – அமெரிக்கா எதிர்ப்பு

ஜெருசலேம், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டின் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசியதுடன் அந்த நாட்டுக்குள் ஊடுருவி கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிப்பதாக சூளுரைத்து காசா மீது போரை தொடங்கியது. 6 மாதங்களை கடந்த பிறகும் இந்த போர் … Read more

சத்தீஸ்கர் மாநிலத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலியான சோகம்

துர்க் (சத்தீஸ்கர்), சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்த விபத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 14-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முன்னதாக 40 பேருடன் சென்ற பஸ் 50 அடி உயரத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்தபோது, தனியார் நிறுவன ஊழியர்களை அவர்களது ஷிப்ட் முடிந்து இரவு 8.30 மணி அளவில் பஸ்சில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்ததாக துர்க் காவல் கண்காணிப்பாளர் … Read more

தேசிய ஜூனியர் கால்பந்து போட்டி: தமிழக அணி அறிவிப்பு

சென்னை, 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் நரைன்பூரில் வருகிற 12-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி வருமாறு:- அஜய் குமார், கண்ணன் (இருவரும் சென்னை), விகாஷ், ஜெயசூர்யா, முகமது சாப்வான் (மூவரும் கோவை), ரோஜர் வென்ஜிலாஸ், ரக்ஷித், நிஷாக், ரூனி ரோஸ், அசின் கோவ்சிக், ஜான் பால், லிஜோ (7 பேரும் கன்னியாகுமரி), லோகேஷ் குமார், மகேஷ், ஷைலேஷ் … Read more

சீன வெளியுறவு மந்திரி வாங் யி உடன் ரஷிய வெளியுறவு மந்திரி சந்திப்பு

பீஜிங், சீன வெளியுறவு மந்திரி வாங் யி அழைப்பை ஏற்று, ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரவ் சீனாவுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். அவர் 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். சீன-ரஷிய தூதரக உறவுகளின் 75-வது ஆண்டை முன்னிட்டு இரு தரப்பினரும் தங்களுடைய பார்வைகளை பரிமாறி கொள்வார்கள். இருதரப்பு உறவுகளில் வளர்ச்சிக்கான நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்பது, வெவ்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது ஆகியவை பற்றி பேசப்படும் என பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, சீன வெளியுறவு … Read more

கொலை குற்றவாளிகள் வேறு கோர்ட்டில் சரண் அடையும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

புதுடெல்லி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்த ஆராவமுதன் என்பவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய காஞ்சீபுரம், திருப்பூரைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோர்ட்டில் சரண் அடைந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கடந்த மார்ச் 8-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், ‘கொலை வழக்குகளில் தொடர்புடைய கோர்ட்டில் மட்டுமே சரண் அடைய வேண்டும். வேறொரு கோர்ட்டில் … Read more