இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் வீடு புல்டோசர் கொண்டு இடிப்பு

போபால், மத்தியபிரதேச மாநிலம் குனா பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆரியன் பதான் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். கூலி தொழிலாளியான ஆரியன் பதான் இளம்பெண்ணின் தாயார் பெயரில் உள்ள சொத்துக்கு ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து, ஆரியனுடனான காதலை இளம்பெண் துண்டித்துள்ளார். ஆனால், தொடர்ந்து தொல்லை கொடுத்த ஆரியன் பல மாதங்களாக இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், தனது பெயரில் சொத்துக்களை எழுதி தரும்படி அப்பெண்ணை தொடர்ந்து மிரட்டியுள்ளார். … Read more

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க 100 சதவீதம் தயார் – தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இந்த ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்ததும் வரும் ஜூன் 1ம் தேதி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் தொடங்குகிறது. … Read more

காசா: பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கை 34,049 ஆக உயர்வு

காசா, இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதன்படி, 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் வன்முறைக்கு உயிரிழந்தனர். 200-க்கும் மேலானவர்கள் பணய கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. சிலர் பணய கைதியாக இருக்கும்போதே உயிரிழந்து உள்ளனர். ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியுள்ள மீதமுள்ளவர்களையும் மீட்போம் … Read more

கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்

அமராவதி, ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி, 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் வரும் மே 13ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18ம் தேதி தொடங்கியது. அதன்படி பல்வேறு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சர்மிளாவுடன் அவரது உறவினரும், கடந்த 2019 … Read more

சேப்பாக்கத்தில் தோனிக்காக ஒலித்த ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு சத்தத்தை வேறு எங்கும் கேட்டதில்லை – மிட்செல் ஸ்டார்க்

மும்பை, இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனாக விளங்கிய எம்.எஸ். தோனி ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் இந்த வருடத்துடன் ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் தோனி களம் இறங்கும் போதெல்லாம் ரசிகர்கள் தோனி… தோனி… என ஆர்ப்பரிக்கிறார்கள். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும்போது மைதானத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் ரசிகர்களும் தோனி… தோனி… என சத்தம் எழுப்பி வருகின்றனர். இது மற்ற வீரர்களை … Read more

ஈகுவடார் நாட்டில் எல் நினோ பாதிப்பு; 60 நாட்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம்

குவிட்டோ, ஈகுவடார் நாட்டின் அதிபராக டேனியல் நொபோவா பதவி வகித்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பரில் அதிபராக பொறுப்பேற்று கொண்ட அவருடைய ஆட்சியில், கடந்த ஜனவரியில் முதல் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதில், ராணுவம் மற்றும் போலீசார் இடையே அதிக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, இந்த நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2-வது முறையாக அந்நாட்டில் நெருக்கடி நிலையை நொபோவா அறிவித்து உள்ளார். ஈகுவடாரின் எரிசக்தி உட்கட்டமைப்பை பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை … Read more

சிக்கிம் சட்டசபை தேர்தல்: 79.77 சதவிகித வாக்குப்பதிவு

கங்டோக், நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் நேற்று (19-ம் தேதி) நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சிக்கிம், அருணாச்சலபிரதேசம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று … Read more

டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி வரும் 28ம் தேதி தேர்வு…? – வெளியான தகவல்

புதுடெல்லி, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இந்த ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்ததும் வரும் ஜூன் 1ம் தேதி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் தொடங்குகிறது. … Read more

போர் பதற்ற சூழலில்… இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளின் ராணுவ பலம்; ஓர் ஒப்பீடு

தெஹ்ரான், இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரங்களாகவே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போருக்கான பதற்ற நிலை நீடித்து வருகிறது. ஈரான் சில மாதங்களில் அணு ஆயுதங்களை கட்டமைக்க உள்ளது என்று இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டை கூறியுள்ளன. ஆனால், இதனை ஈரான் மறுத்துள்ளது. நாங்கள் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அமைதிக்காகவும் மற்றும் குடிமக்களின் நன்மைக்காகவும் என்று கூறியுள்ளது. இந்த சூழலில், ஈராக் … Read more

நாம் வாழ்வது பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானா ? – நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம்

பெங்களூரு, பிரபல கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா, பெங்களூருவில் கன்னட மொழியில் பேசிய தன்னுடைய கணவரை உள்ளூர் கன்னடவாசிகள் பலர் துன்புறுத்திய சம்பவத்தைக் குறிப்பிட்டு `நாம் வாழ்வது பாகிஸ்தானா..ஆப்கானிஸ்தானா என்று ஆவேசமாக கேள்வியெழுப்பி உள்ளார். இதுகுறித்து நடிகை ஹர்ஷிகா பூனாச்சா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு நானும் எனது கணவரும் எங்களின் குடும்பத்தினருடன் பெங்களூருவின் ப்ரேசர் நகர்ப்பகுதிக்கு அருகில் உள்ள புலிகேஷி நகரில் உள்ள உணவகத்திற்கு இரவு உணவு சாப்பிட … Read more