தூக்கத்திற்காக கஞ்சா பயன்படுத்தியதாக ஆர்யன் கான் வாக்குமூலம்: குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்

மும்பை : மும்பையில் இருந்து கோவா நோக்கி கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மத்திய விசாரணை அமைப்பான போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். நடுக்கடலில் கப்பல் சென்றபோது நடந்த இந்த சோதனையில், அங்கு போதைப்பொருள் விருந்து நடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போதை விருந்தில் கலந்து கொண்டதாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் … Read more

நல்ல மனிதனின் கையில் துப்பாக்கியை கொடுங்கள்- முன்னாள் அதிபர் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த மே 25-ஆம் தேதி துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாகி கலாச்சாரத்திற்கு … Read more

மேலும் 2,706 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு சற்று குறைவு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் புதிதாக 2,706 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 2,685 ஆக இருந்தது. நேற்று 2,828 ஆக உயர்ந்த நிலையில், இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 55 ஆயிரத்து 749 ஆக உயர்ந்தது. கேரளாவில் 846, மகாராஷ்டிராவில் 550 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லியில் 357, கர்நாடகாவில் 241, … Read more

ஒரு லட்ச ரூபாய்க்காக திருமண வயது வராத மகளுக்கு திருமணம்: தடுத்த மனைவியை கொன்ற கணவன்

டாடு : பாகிஸ்தானின் லக்கி ஷா சதார் பகுதியைச் சேர்ந்தவர் சுல்பிகர் ஜிஸ்கானி. இவரது மனைவி பாப்லி ஜிஸ்கானி. சுல்பிகர் ரூ. 1 லட்சத்திற்காக தனது மகள் ஹுமேராவை ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளார். இதைத் தடுத்த பாப்லியை சுல்பிகர் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாப்லியின் சகோதரர் முனவ்வர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுல்பிகரை கைது செய்துள்ளனர். மேலும் ஏற்கெனவே, சுல்பிகர் தன்னுடைய இரண்டு மகள்களையும் இதுபோல … Read more

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சிக்க சித்தராமையாவுக்கு தகுதி இல்லை: நளின்குமார் கட்டீல்

துமகூரு: கர்நாடக மாநில பா.ஜனதா விவசாய அணி மாநாடு துமகூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:- மத்திய அரசு கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறது. பசல் பீமா பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய-மாநிலத்தில் பா.ஜனதா அரசுகள் உள்ளன. இது இரட்டை என்ஜின் அரசு ஆகும். இந்த அரசுகள் சிறப்பான … Read more

‘ஏதாவது செய்யுங்கள்’ – ஜோ பைடனை நோக்கி கூச்சலிட்ட மக்கள்

வாஷிங்டன்: துப்பாக்கி கலாசாரம் என்பது அமெரிக்காவில் தொடர்ந்து பிரச்சனையாக இருந்து வருகிறது. பள்ளிகளில் துப்பாக்கிச்சூடுகள் நடப்பதும், அதனால் பலர் உயிரிழப்பதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தினாலும் அரசு பெரிதும் இந்த சம்பவங்களில் கவனம் செலுத்துவதில்லை. கடந்த மே 25-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த வாரம் துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த கொடூர இந்த … Read more

திருப்பதியில் இலவச தரிசனம் செய்ய 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு 7 மணியளவில் கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லேப்பாட்சி வணிக வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆனது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருமலை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தற்போது பள்ளி, … Read more

கேரளாவில் பரவும் புதிய வகை காய்ச்சல்- கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாநில அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் மாவட்டம் பனஞ்சேரியை சேர்ந்த ஜோபி என்பவர் மேற்கு நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாநில சுகாதாரத்துறை உஷார்படுத்தப் பட்டுள்ளது. மேற்கு நைல் காய்ச்சல், க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்ட மருத்துவ சிறப்புக் குழு, உயிரிழந்த நோயாளி வசித்து வந்த கண்ணாரா பகுதிக்கு சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.  திருச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more

லைவ் அப்டேட்ஸ்: போரினால் பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் ஆய்வு

30.5.2022 04.20: ரஷிய போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். கார்கீவ் நகரத்தை சுற்றி வளைக்க முயன்று தோல்வியுற்ற பிறகு ரஷிய படைகள் சீவிரோடோனெட்ஸ்க் நகரம் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 02.40: ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து நகரத்தின் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தவறியதற்காக கார்கிவ் பாதுகாப்பு சேவை பிரிவு தலைவரை நீக்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சீவிரோடோனெட்ஸ் பகுதியில் … Read more

டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னை: மேட்டூர் அணை மற்றும் கல்லணைகளில் இருந்து குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இதனையடுத்து கடைமடைப் பகுதி விவசாயத்திற்கும் தண்ணீர் சென்று சேரும் வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்களை தூர்வாரும் பணி நிறைவுடையும் நிலையில் உள்ளது.  இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி … Read more