உ.பி. மக்களவைத் தேர்தலில் பாஜக 75 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்- கட்சியினருக்கு யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல்

லக்னோ:  உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  இதில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளதாவது:  உத்தர பிரதேசத்தில் முதன்முறையாக கடைசி வெள்ளிக்கிழமை தெருக்கள், சாலைகளில் நமாஸ் நடத்தப்படவில்லை. வழிபாட்டு தலங்கள், மசூதிகளில் அவர்கள் மத நிகழ்ச்சிகளை நடத்த முடியும். ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தி அமைதியாக நடைபெற்றது.  மாநிலத்தில் எந்த மதக் கலவரமும் நடைபெறவில்லை. மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகள் … Read more

பிரெஞ்சு ஓபன் காலிறுதிக்கு நோவக் ஜோகோவிச் தகுதி

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.  இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில்,  நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான செர்பியோவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்கொண்டார்.  இந்த போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வாட்ஸ்மேனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

பஞ்சாப் பாடகர் படுகொலை- ஆம் ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

சண்டிகர்: பஞ்சாப் மாநில பிரபல பாடகர்  சித்து மூஸ்வாலா கடந்த டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தார். பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூஸ்வாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.  இந்நிலையில் நேற்று மான்சா மாவட்டத்தில் அவர் காரில் சென்ற போது சுற்றி வளைத்த மர்ம கும்பல் துப்பாக்கியால் பலமுறை … Read more

மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு- தமிழகத்தில் ப.சிதம்பரம் போட்டி

புதுடெல்லி: பாராளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்கான 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் கர்நாடகாவில் இருந்து மீண்டும் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனும், மகாராஷ்டிராவில் இருந்து மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த பட்டியல் வெளியான சிறிது நேரத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 10 பேர் இடம் பெற வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ்  கட்சி வெளியிட்டது.   இதில் தமிழகத்தில் இருந்து முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை- பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

புதுடெல்லி: கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி  முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு அரசு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம், கடந்த ஆண்டு மே 29ந் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப் பட்டது.  கொரோனாவால் அனாதையான குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், … Read more

ஐபிஎல் கிரிக்கெட்- சாம்பியன் பட்டம் வென்றது குஜராத் டைட்டன்ஸ்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.   டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 39 ரன்னில் வெளியேறினார்.   கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னில் நடையை கட்டினார். தேவ்தத் படிக்கல் 2 ரன்னில் … Read more

தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு- இந்தியாவில் புதிதாக 2,828 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 879, மகாராஷ்டிராவில் 529, டெல்லியில் 442, அரியானாவில் 227, கர்நாடகாவில் 196, உத்தரபிரதேசத்தில் 134 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று பாதிப்பு 2,685 ஆக இருந்தது. இந்நிலையில் தினசரி பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது. இதுவரை … Read more

மாநிலங்களவை தேர்தல் – பாஜக சார்பில் நிர்மலா சீதாராமன் உள்பட 16 வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: தமிழகம், கர்நாடகா உள்பட 15 மாநிலங்களில் இருந்து 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதை அடுத்து அந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 10ல் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜூன் 10-ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்காக மொத்தம் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது.  இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடகாவில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட உள்ளார்.  மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவை … Read more

கேரளாவில் விபத்துக்குள்ளாகும் 214 பகுதிகள்- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 2 நாள் பிராந்திய அதிகாரிகளின் மாநாடு நேற்று தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் அல்கா உபாத்யாயா மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- உலகத் தரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பது மட்டுமல்லாமல், விபத்தில்லா சாலைகளை அமைப்பதிலும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்துகிறது. கேரளாவில் அதிக விபத்து நடக்கும் இடம் என சமீபத்தில் 214 பிளாக் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அதற்கு தீர்வு … Read more

ஐபிஎல் இறுதிப்போட்டி – குஜராத் வெற்றிபெற 131 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 31 ஆக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 22 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னில் … Read more