அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைவர்கள் வாழ்த்து

அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொது செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். ஈபிஎஸ்-க்கு பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் … Read more

பான் கார்டு – ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு!

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இந்த காலக்கெடுவை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

”உங்களுக்கு பரிசு வந்திருக்கு; அத வாங்கணும்னா..”-இணைய மோசடியில் ரூ.12 லட்சத்தை இழந்த பெண்!

அரியலூரில் பரிசு பொருள் பார்சல் வந்திருப்பதாகக் கூறி ரூ.12 லட்சம் இணைய மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.  அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது அம்மா ஜெயந்தியின் போனுக்கு வாட்ஸ் அப்பில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் இங்கிலாந்தில் இருந்து ஆங்கிலத்தில் பேசிய பெண் தன்னுடைய மகள் பிறந்தநாளை முன்னிட்டு உங்களுக்கு பரிசு தொகை மற்றும்‌ பரிசுப் பொருட்கள் விழுந்துள்ளதாக ஜெயந்தியிடம் ஆங்கிலத்தில் கூறியுள்ளனர். மேலும் … Read more

மோடி படத்தைக் கிழித்த வழக்கில் குஜராத் காங். எம்.எல்.ஏவுக்கு ரூ.99 அபராதம்!

பிரதமர் நரேந்திர மோடி படத்தைக் கிழித்த காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு ரூ.99 அபராதம் விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வேளாண் கல்லூரி மாணவர் போராட்டத்தின்போது துணைவேந்தர் அறைக்குள் நுழைந்து, அவரது மேசையில் இருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை கிழித்தெறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்த் படேல் என்பவருக்கு ரூ.99 அபராதம் விதித்துள்ளது குஜராத் நீதிமன்றம். இந்த வழக்கில் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வி.ஏ.தாதால் தீர்ப்பளித்துள்ளார். சட்டப்பிரிவு 447-ன்கீழ் குற்றவியல் அத்துமீறல் என்ற வகையில் … Read more

லிப்ட் கொடுத்தது குத்தமா? உதவி செய்தவருக்கு நடந்த விபரீதம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

மதுரவாயலில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் உதவி கேட்பது போல நடித்து, சில நிமிடங்களுக்குப்பின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை மட்டுமில்லாமல் வாகன ஓட்டியிடமிருந்து அவரது பைக், மொபைல், செயின் ஆகியவற்றை திருடி சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (30). இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த வார சனிக்கிழமை (மார்ச் 25) இரவு சுதாகர் மதுரவாயல் செட்டியார் அகரத்தில் உள்ள தனது … Read more

டெல்லியில் தலைப்பாகை இல்லாமல் நடந்துசென்ற அமரித்பால் சிங்.. வெளியான புதிய சிசிடிவி காட்சி

போலீசாரால் தேடப்பட்டு வரும் பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், தற்போது தலைப்பாகை இல்லாமல் வெளியேறும் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் … Read more

‘விடுதலை’ படத்தில் எத்தனை இடங்களில் மியூட்? – வெளியான சென்சார் சான்றிதழ்!

வெற்றிமாறனின் ‘விடுதலை – 1’ படத்தில் மொத்தம் 11 இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ள சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையான ‘துணைவன்’ என்றக் கதையை தழுவி ‘விடுதலை’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதில் முதல் பாகம் வருகிற 31-ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, சூரி, கௌதம் … Read more

"எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார்" – திருமாவளவன் கருத்து

எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்றும், அவர் பாஜகவை தூக்கி பிடிக்காமல் தமிழர்கள் மற்றும் அதிமுகவினரின் நலன் கருதி செயல்பட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலித் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்கள் அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு ஆதரவளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், எடப்பாடி பழனிசாமியா அல்லது … Read more

விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது ஸ்ரீநகர் – ஜம்முவை இணைக்கும் ரயில்வே பாலம்!

ஆங்கிலேயரால் இந்தியாவிற்கு ரயில் தடங்கள் அமைந்தாலும் இந்திய அரசாங்கமானது அதை விரிவு படுத்தி மக்களுக்கு பயணம் சுலபமாகும் வரையில் பல்வேறு விதங்களில் வழி தடங்களை அமைத்து பயணத்தை எளிமை படுத்தி வருகிறது. அதன் படி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வந்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை இந்திய ரயில்வே துறை அமைத்துள்ளது. இது வருகின்ற மே மாதம் பயன்பாட்டிற்கு வரலாம் … Read more

மதுப்பழக்கமே இல்லாதவர் மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டிய விவகாரம்: காவல்துறை விளக்கம்

மதுப்பழக்கமே இல்லாத ஒரு நபரை, மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டியது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை வழியாக சாலிகிராமம் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை சட்டம் – ஒழுங்கு காவலர்களான இளங்கோவன் உள்ளிட்டோர் தீபக்கின் வாகனத்தை மடக்கியுள்ளனர். அவர் … Read more