ஏப்ரல் முதல் உயரும் அத்தியாவசிய மருந்துகளின் விலை!

ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில்  மருந்துகளின் விலைகளை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் . அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் மாதம் … Read more

“தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது”- டிஜிபி சைலேந்திரபாபு

“தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பாக மாநிலமாக உள்ளது” என காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இன்று சென்னை லயோலோ கல்லூரியில் நடந்த ‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுத்து புதிய பாரதம் படைப்போம்’ என்ற நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள், லயோலோ கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக லயோலா கல்லூரியில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. அதில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி … Read more

கை கொடுத்த GPS.. அம்பலமான மனைவியின் திருமணத்தை மீறிய உறவு – அதிரடியில் இறங்கிய கணவன்!

தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்கு நமக்கு உதவியாக இருக்கும் என்பது இக்கட்டான சூழலில்தான் தெரிந்துகொள்ள முடியும் என்பது பெங்களூருவில் கணவன் ஒருவர் மனைவியால் நேர்ந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்திருக்கிறார். வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்க காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவி அந்த நபருக்கு உதவியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி என்ன நடந்தது என்பதை காணலாம். இல்லறத்தை மீறிய உறவுகள் பலவும் வெளி வந்தாலும் அதிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது கடினமானதாகவே இருக்கும். நேசித்தவர்களால் மோசம் போய்விட்டோமே என்ற … Read more

இபிஎஸ்-க்கு சாதகமாக வெளியான தீர்ப்பு… உடனடியாக இரு நீதிபதிகள் அமர்வை நாடிய ஓபிஎஸ் தரப்பு

அதிமுக ஜூலை 11ல் பொது குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடைவிதிக்க கோரிய ஒ.பி.எஸ். அணியினரின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு இன்று நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவிற்கு தடை கோரும் நேல்முறையீடு மனுவை ஓபிஎஸ் தரப்பு தொடுத்தது. அதை அவசர வழக்காக நாளை விசாரிக்க நீதிபதிகள் மகாதேவன், முகமது சபிக் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. அதிமுக-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் … Read more

சென்னையில் பழுது பார்க்கப்பட்டு அமெரிக்கா திரும்பிய 'மேத்யூ பெர்ரி' போர் கப்பல்!

அமெரிக்க கடற்படைக் கப்பல் மேத்யூ பெர்ரி இந்தியாவில் சென்னைக்கு அருகே பழுதுபார்க்கப்பட்ட பின்னர் இந்தோ-பசிபிக் கடல் பகுதிக்குத் திரும்பியது. அமெரிக்க கடற்படையின் லூயிஸ் மற்றும் கிளார்க் வகை உலர் சரக்குக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேத்யூ பெர்ரி, சென்னைக்கு அருகில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் அண்டு டி ஷிப்யார்டு என்று அழைக்கப்படும் லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் கப்பல் பணிமனையில் மார்ச் 11 முதல் மார்ச் 27, 2023 வரையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணியை வெற்றிகரமாக … Read more

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை!

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகை. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில்,நேற்று இரவு தீவிரவாத தடுப்பு நடவடிக்கை தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், திருச்சி மாநகர காவல் துறையினருடன் இணைந்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். அங்கு நேரில் வந்திருந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, வீரர்களின் ஒத்திகை பயிற்சியை கண்காணித்தார். நள்ளிரவு நேரத்தில் ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றிலும், துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படைகள் வீரர்கள் திடிரென … Read more

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1573 ஆக உயர்வு!

கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் , நேற்று முன்தினம் 1,805 ஆக இருந்த ஒரு நாள் பாதிப்பு , கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 10,300 ல் இருந்து 10,981 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி … Read more

இதுக்கெல்லாமா லீவ் கேட்பீங்க? மின்பொறியாளரின் லீவ் லெட்டரை பார்த்து அதிர்ந்த மின்வாரியம்!

நாளை மின்வாரிய பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியில் ஈடுபட உள்ள சூழலில், புதுக்கோட்டையை சேர்ந்த உதவி மின் பொறியாளர் ஒருவர் விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரிய பணியாளருக்கு இந்த காரணங்களுக்காகவெல்லாம் விடுமுறை அளிக்க முடியாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை மின்வாரிய ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர். இந்த சூழலில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் விடுப்பு கோரி … Read more

காதுகள் மூடியிருக்கும் விநோத பிரச்னை..சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் 4வயது சிறுவன்!

காதுகள் மூடி இருக்கும் விநோத பிரச்னை! அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வரும் 4 வயது சிறுவன்! சென்னை அருகே திருவேற்காட்டில் அறியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுவன், ஏழ்மையின் காரணமாகவும், சிகிச்சை பெற முடியாமலும், தனக்கு ஏற்பட்ட பாதிப்பினால் பள்ளிக்கு செல்ல முடியாமலும் தவித்து வரும் நிலையில், சிகிச்சைக்காக அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளனர் சிறுவனின் பெற்றோர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு பகுதி, நடேசன் நகரில் வசித்து வருபவர்கள் … Read more

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை – கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து  கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. புதுச்சேரி வில்லியனூர் பொறையூரை சேர்ந்த பழனி என்பவரின் மகன் பிரதீஷ் (23). இவர் அப்பகுதியில் பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார், அப்போது பேருந்தில் பள்ளிக்கு செல்லும் 17 வயது  மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார். இந்த நிலையில், … Read more