சனிக்கிழமைகளிலும் சாரதி அனுமதி பத்திரம்

 வாகன அனுமதி பத்திரம் மற்றும் வைத்திய சான்றிதழ்களை விநியோகிப்பதற்கு போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெத அலுவலகமும் நுகேகொடயிலுள்ள தலைமை வைத்திய நிறுவனமும் இம்மாதம் 15ஆம் திகதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் திறந்திருக்கும். இதன் மூலம் சனிக்கிழமைகளிலும் வாகன சான்றிதழ் அனுமதி பத்திரம் வைத்திய சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை அரசு நிறுவன வளாகங்களில் விதிக்கப்பட்டுள்ள புதிய தடை

அரச நிறுவனங்களுக்குள், வெற்றிலை, பாக்கு, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், விற்பனைச் செய்வதற்கும் அரசாங்கம் தடைவிதிக்க தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையில் நேற்று சமர்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, புற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களினால் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

 பாராளுமன்றம் சக்தி வாய்ந்த நிறுவனமாக மாறியிருக்கிறதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமீபத்தில் பொரளையில் வாகன பிரிவில் பொறுப்பதிகாரி வாகன விபத்தில் இறந்தமை முழு நாட்டுக்கும் கரும் புள்ளி சம்பவமாக அமைந்திருப்பதாக பிரதமர் சுட்டிகாட்டியுள்ளார். இந்த அனர்த்தத்தை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒரு வாகனத்தில் மூலம் பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாகி தப்பி ஓடி உள்ளதுடன் மற்ற வாகனம் அது தொடர்பாக அறிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் இந்த இரண்டு விடயங்களும் தவறானது என்றும் பிரதமர் … Read moreசுயாதீன ஆணைக்குழுக்களினால் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

ஜெனீவாவில் பங்கேற்க இலங்கை சார்பில் ஒரு குழுக்கு அனுமதி

தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையின் 40 வது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு இலங்கையின் சார்பில் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான ஒரேயொரு குழுவே பங்கேற்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் திலக் மாரப்பனவும் வேறு உயரதிகாரிகளும் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியினால் ஜெனீவாவுக்கு தனியாக அனுப்பப்படவிருந்த குழுவின் உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகமவும் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவனும் இந்த குழுவில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். ஜனாதிபதியின் குழுவின் … Read moreஜெனீவாவில் பங்கேற்க இலங்கை சார்பில் ஒரு குழுக்கு அனுமதி

வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் பாராட்டு

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் எதிர்கால சுபீட்சத்திற்காகவும், மக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்காகவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சிறந்த 2019 வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளார் என்று முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் தெரிவித்துள்ளார்.  வரவு செலவுத்தி;ட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வரவு செலவுத் திட்டத்தை 11 தடவைகள் தாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல்இ இவ்வாறான வரவு செலவுத்திட்டங்களை எதிர்காலத்தில் நிதி அமைச்சர் … Read moreவரவு செலவுத்திட்டத்திற்கு முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் பாராட்டு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி அருகே, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரை டன் மதிப்பிலான கடல் அட்டைகளை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அருகே நபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் சிலர் கடல் அட்டைகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருப்பதாக தூத்துக்குடி பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுதத்து,புதுக்கோட்டை பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். பொலிஸாரைப் பார்த்ததும் அங்கிருந்த ஒரு கும்பல் தப்பி ஓடி விட்டனர். பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்ட அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு,அரை … Read moreஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பொருட்கள் பறிமுதல்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான உத்தேச விலை சூத்திரம்

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைக்கான பொருத்தமான தீர்வை காணும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவினால் சர்வதேச சந்தையில் நிலவும் விலை மற்றும் கடைபிடித்தல் விதிகளை கவனத்தில் கொண்டு நுகர்வோருக்கும் அரசாங்கத்துக்கும் பால்மா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பெறுபேறு கிடைக்கும் வகையில் இறக்குமதி பால்மாவிற்கு விலை சூத்திரமொன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விலை சூத்திரத்தை நுகர்வோர் அதிகார சபை மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசன மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் … Read moreஇறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான உத்தேச விலை சூத்திரம்

சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கும் ஆசிரியர் சங்கம்

பல கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதிபர்கள், இலங்கை கல்வி சமூக சம்மேளனம், உள்ளிட்ட கல்வித்துறையுடன் தொடர்புபட்ட 30 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடுகள் போன்ற … Read moreசுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கும் ஆசிரியர் சங்கம்

எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருட்களின் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய நேற்று நள்ளிரவு முதல் டிசல் ஒரு லீற்றரின் விலை ஒரு ரூபாவினாலும் சுப்பர் டிசல் ஒரு லீற்றரின் விலை 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சுப்பர் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதhக தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி…!

கடந்த வருடம் இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படவுள்ளன இதன்படி சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த பரீட்சையில் 656இ641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.