விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் சான்றிதழ் பயிற்சி வகுப்புகள்

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி முதல் பின்வரும் சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் : 075 092 2595

வங்கக்கடலில் உருவாகிறது புயல்

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை (06) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில் நீடிக்கும் … Read more

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவின் தொழில்நுட்ப உதவி

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் தங்கியிருப்பதனை தவிர்க்கும் வகையில் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அவசியமான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்கும் நோக்கில் இந்திய தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், உள்நாட்டின் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார். அது தொடர்பில், இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையும் (NDDB) இந்தியாவின் அமுல் பால் நிறுவனமும் இணைந்து இந்நாட்டில் … Read more

மட்டக்களப்பில், மாணவர்களுக்கு போதைப்பொருள் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு  மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது. இதன் போது சமகாலத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சவாலாக அமைந்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பாவும், அதனால் மாணவர்களில் கல்வி வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம், மற்றும் இதனூடாக குடும்பங்களில் ஏற்படும் பின் விளைவுகள், சிறைச்சாலையில் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாகவும்  மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் தலைவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் … Read more

பத்திரிகை அறிக்கையிடலில் பொறுப்புடன் மற்றும் உண்மையைக் கண்டறிந்து செய்தி அறிக்கையிடவும்

பத்திரிகை அறிக்கையிடலில் பொறுப்புடன் மற்றும் உண்மையைக் கண்டறிந்து செய்தி அறிக்கையிடவும் – Sunday Times பத்திரிகையின் ஆசிரியருக்கு சபாநாயகரின் கடுமையான எச்சரிக்கை பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் ஓய்வூதிய வயது தொடர்பில் எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை இந்த செய்தி அறிக்கைக்கு பொறுப்புக்கூறவேண்டிய நபர்களை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அழைக்கவும் பத்திரிகை அறிக்கையிடலில் பொறுப்புடன் மற்றும் உண்மையைக் கண்டறிந்து செய்தி அறிக்கையிடுமாறு Sunday Times பத்திரிகையின் ஆசிரியருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த … Read more

மக்கள் எவரும் தேர்தலைக் கோரவில்லை! – எதிரணிக்கு அமரவீர பதிலடி

இலங்கையில் மக்கள் எவரும் தேர்தலைக் கோரவில்லை. எனினும், உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்  என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். மக்கள் தேர்தலைக் கோரவில்லை அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் தேர்தலைக் கோரவில்லை. எனினும், எதிர்க்கட்சியின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும். தேர்தலில் மக்கள் அவர்களுக்குச் சிறந்த பதிலை வழங்குவார்கள்” – என்றார். Source link

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவையில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு ……..

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவையில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்திற்கும், நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு மாகாண ஆணையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்திற்கும், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு மாகாண ஆணையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் (02) இடம்பெற்றது. இந்த ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி குமாரி விஜயரத்ன தலைமையில் அண்மையில் (02) பாராளுமன்றத்தில் … Read more

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி ,பிரதேசத்தில் டெங்கொழிப்பு நடவடிக்கை

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கொழிப்பு நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து வீடு வீடாகச் சென்று டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எம். இஸ்மாயில் தெரிவித்தார். இதேவேளை , பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த 25 வீட்டு உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சுமார் 250 … Read more

மின்விநியோக தடை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

நாட்டில் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதற்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அடுத்தாண்டில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மின்சார சபை ஒரு அலகுக்கு 56.90 ரூபாவை செலவிட வேண்டியிருக்கும். இலங்கை மின்சார சபையின் மதிப்பீடுகளின்படி இது கணக்கிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் தற்போதைய கட்டணத்தின் அடிப்படையில் ஒரு அலகுக்கு சராசரியாக 29.14 ரூபய் வசூலிக்கப்படுகிறது. இதனால் 423.5 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என்று அவர் கூறினார். மின் பாவனையாளர்களில் … Read more

வங்காள விரி குடா கடலில் நிலநடுக்கம்

வங்காள விரி குடா கடலில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (05)  காலை 8.32 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்ச்சியை வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ளவர்களும் உணர்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.