கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் பாஜகவில் இணைந்தார்

கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அபிஜித் கங்கோபாத்யாய கடந்த செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் பாஜகவில் சேரப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்த குமார் மஜும்தார், எதிர்க்கட்சித் தலைவரும் பாஜகசட்டப்பேரவை கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி ஆகியோர் முன்னிலையில் அபிஜித் கங்கோபாத்யாய நேற்று பாஜகவில் இணைந்தார். முன்னதாக கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் வந்த அவருக்கு கட்சியினர் உற்சாக … Read more

மகளிர் தினத்தன்று இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர்! கேஸ் சிலிண்டர் விலை ரூ 100 குறைந்தது!

LPG cylinder prices by Rs100 : பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசு என்று நிரூபிக்க மகளிர் தினத்தில் சமையல் எரிவாயு விலையை நூறு ரூபாய் குறைத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் பிரதமர்!

டிரோன் தாக்குதலில் சிக்கிய கப்பலை மீட்டது இந்திய கடற்படை

புதுடெல்லி: செங்கடல் மற்றம் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து ஹவுதி தீவிரவாதிகள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசா மீதான தாக்கு தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்த சில வாரங்களில், தாக்குதலுக்கு உள் ளான பல வணிக கப்பல்களுக்கு இந்திய கடற்படை உதவியது. இந்நிலையில் ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் பர்படாஸ் நாட்டுக்கு சொந்தமான எம்.வி.ட்ரூ என்ற வணிக கப்பல் சென்றது. அதன் மீது … Read more

மாநிலங்களின் கொள்கை உருவாக்கத்துக்கு புதிய தளம்: நிதி ஆயோக் அறிமுகம்

புதுடெல்லி: மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு திட்டக்குழுவைகலைத்துவிட்டு, நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கியது. இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் முன் னெடுத்துச் செல்வதற்கான கொள்கைகளை பரிந்துரை செய்யும் பணியை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாநிலங்கள் முக்கிய துறைகளில் சிறந்த திட்டங்களை வகுக்க உதவும் வகையில் ‘NITI for States’ என்ற புதிய தகவல் தளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தளத்தை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தொடங்கி வைத்தார். … Read more

பெங்களூரு குடியிருப்பில் நீரை வீணடித்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகராக விளங்கும் பெங்களூருவில் கடும் த‌ண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழியாததால் பெங்களூருவுக்கு நீரை வழங்க முடியாமல் மாநகராட்சியின் நீர் விநியோக வாரியம் திணறி வருகிறது. இதனால் டேங்கர் லாரி நீரின் விலைபன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெங்களூரு ஒயிட் ஃபீல்ட்டில் உள்ள தி பாம்மெடோஸ் லே அவுட் குடியிருப்புவாசிகளுக்கு … Read more

டெல்லி மதுபான ஊழல் வழக்கு | மார்ச் 16ல் நேரில் ஆஜராக கேஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்

புதுடெல்லி: மார்ச் 16-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகக் கோரி அனுப்பிய சம்மன்களை தொடர்ந்து நிராகரித்தது தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள புதிய மனுவினைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த சம்மனை அனுப்பியுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவு 50-ன் கீழ் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் … Read more

தேர்தல் பத்திரம் விவரம்: எஸ்பிஐ மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நிறைவடைந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த மனுவை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) அமைப்பு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2019, ஏப்.12-ம் தேதி முதல் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி எஸ்பிஐ வங்கிக்கு உச்ச … Read more

“சந்தேஷ்காலி விவகாரத்தில் பாஜக பொய் தகவல்களை பரப்புகிறது” – மோடிக்கு மம்தா எதிர்வினை

கொல்கத்தா: “சந்தேஷ்காலி பற்றி பாஜக பொய்யான தகவல்களைப் பரப்புகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் மேற்கு வங்கம்” என்று அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். மாநில தலைநகர் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெண்கள் அணியின் பேரணி வியாழக்கிழமை நடந்தது. அதில் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சிலர் சந்தேஷ்காலி பற்றி தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து … Read more

சிலிண்டர் மானியம் ரூ.300 திட்டத்தை மேலும் ஓராண்டு நீட்டித்தது மத்திய அரசு!

புதுடெல்லி: பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் சிலிண்டர்களுக்கான மானியத் தொகை ரூ.300-ஐ தொடர்ந்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட (PMUY) பயனாளிகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு … Read more

காங்கிரஸ் 30 – 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது: அசாம் முதல்வர் கருத்து

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 30 – 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வேண்டும் (இந்திய கிரிக்கெட் அணி உறுப்பினர்களைப் போல்) என்பதுதான் எனது விருப்பம். ஆனால், அது நிகழாது. ஆனால், காங்கிரஸ் கட்சி 30 – 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது. … Read more