‘மோடி வெற்றி பெற வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே காரணம்’ – ராகுல் பேச்சு @ மும்பை நிகழ்வு

மும்பை: பிரதமர் மோடியின் வெற்றிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே காரணம் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதனை மும்பையில் நடைபெற்ற ஒற்றுமை நீதி நடைபயண நிறைவு விழாவில் அவர் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை கடந்த ஜனவரி 16-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் வழியாக இந்த பயணம் மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு இண்டியா … Read more

'கண்ணீர்விட்டு கதறினார்…' காங்கிரஸ் டூ பாஜக சென்ற தலைவர் – மறைமுகமாக தாக்கிய ராகுல்

Rahul Gandhi Latest News: அதிகாரத்தை எதிர்த்து மோத முடியாமல் முன்னாள் சகாக்கள் தங்களிடம் கண்ணீர்விட்டு கதறி அழுததாக மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி எம்.பி பேசி உள்ளார்.

வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார் ஜெகன் – நகரியில் ரோஜா மீண்டும் போட்டி

ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கடப்பாவில் தமது கட்சியை சேர்ந்த மொத்தம் 175 சட்டப்பேரவை மற்றும் 24 மக்களவை தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில், நகரி தொகுதியில் நடிகை ரோஜா மீண்டும் களத்தில் இறங்குகிறார். ஆந்திர மாநிலத்தில் வரும் மே மாதம் 13-ம் தேதி 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று ஆந்திராவில் ஆளும் … Read more

தொகுதிப் பங்கீடு அறிவிப்பை நிறுத்தி வைத்த லாலு!

பிஹாரில் மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவான போதிலும் இதற்கான அறிவிப்பை லாலு நிறுத்தி வைத்துள்ளார். சிராக் பாஸ்வான் அல்லது பசுபதி பராஸ் வருகையை எதிர்நோக்கி அவர் காத்துள்ளார். பிஹாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ-எம்எல் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை லாலு சுமூகமாக முடித்துள்ளார். பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஆர்ஜேடி 28, காங்கிரஸ் 9, சிபிஐ-எம்எல் 2, இ.கம்யூனிஸ்ட் … Read more

டெல்லி மதுபான கொள்கை வழக்கு: அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் கேஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட்டுள்ளது 9-வது சம்மனாகும். இதில் பணமோசடி வழக்கு தொடர்பாக வரும் 21-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்யும்படி தெரிவித்துள்ளது. முன்னதாக இதே வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை ஏற்கனவே 8 சம்மன்களை அனுப்பி இருந்தது. இந்த சம்மன்கள் சட்டவிரோதமானவை எனக் கூறி விசாரணைக்கு ஆஜராகாமல் … Read more

அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-க்கு மாற்றம்

புதுடெல்லி: அருணாச்சலப்பிரதேசம் மற்றும் சிக்கம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4-ம் தேதிக்கு பதிலாக ஜுன் 2-ம் தேதி எண்ணப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. நாட்டில் 2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. அதன்படி, அருணாச்சல், சிக்கிம் மாநில வாக்குப்பதிவுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்படும் என்று அறிவித்திருந்தது. அது தற்போது ஜுன் 2ம் … Read more

தேர்தல் பத்திர புதிய விவரங்கள் வெளியீடு: லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் ரூ.509 கோடி பெற்ற திமுக

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவல்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்த விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஒருநாள் முன்னதாகவே, தேர்தல் ஆணையம் தேர்தல் … Read more

“ஊழல் செய்த எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன” – அமலாக்கத் துறைக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: “ஊழலுக்கு எதிராக அமலாக்கத் துறை கடுமையான மற்றும் அசைக்க முடியாத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு ஊழல் செய்த எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேற்று ஆங்கில ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அமலாக்கத் துறை நடவடிக்கைகளை வெகுவாகப் பாராட்டினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஊழலுக்கு எதிரான எந்தவொரு சலுகையையும் காட்டக் கூடாது என்பதே எங்கள் அரசின் முக்கிய … Read more

Lok Sabha Election 2024: மணிப்பூரில் ஒரே தொகுதிக்கு இரண்டு கட்டமாக தேர்தல்… காரணம் என்ன!

Lok Sabha election 2024: தேர்தல் ஆணையம் 2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, 7 கட்டங்களாக நடைபெறும். 

“அரசியல் சாசனத்தை மாற்ற பாஜக துணியாது” – ராகுல் காந்தி பேச்சு @ மும்பை

மும்பை: பாஜக அதிக சலசலப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் அரசியல் சாசனத்தை மாற்றும் அளவுக்குத் துணியாது என்று கூறியுள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, உண்மையும் நாட்டு மக்களும் தம் பக்கம் இருப்பதாகக் கூறியுள்ளார். மும்பையில் உள்ள மகாத்மா காந்தி இல்லமான மணி பவனில் இருந்து, கடந்த 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய ஆகஸ்ட் கராந்தி மைதானம் வரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘நீதி சங்கல்ப பாதயாத்திரை’ சென்ற ராகுல் காந்தி, அதற்கு பின்னர் நடந்த … Read more