பெங்களூரு குடியிருப்பில் நீரை வீணடித்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகராக விளங்கும் பெங்களூருவில் கடும் த‌ண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழியாததால் பெங்களூருவுக்கு நீரை வழங்க முடியாமல் மாநகராட்சியின் நீர் விநியோக வாரியம் திணறி வருகிறது. இதனால் டேங்கர் லாரி நீரின் விலைபன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெங்களூரு ஒயிட் ஃபீல்ட்டில் உள்ள தி பாம்மெடோஸ் லே அவுட் குடியிருப்புவாசிகளுக்கு … Read more

டெல்லி மதுபான ஊழல் வழக்கு | மார்ச் 16ல் நேரில் ஆஜராக கேஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்

புதுடெல்லி: மார்ச் 16-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகக் கோரி அனுப்பிய சம்மன்களை தொடர்ந்து நிராகரித்தது தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள புதிய மனுவினைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த சம்மனை அனுப்பியுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவு 50-ன் கீழ் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் … Read more

தேர்தல் பத்திரம் விவரம்: எஸ்பிஐ மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நிறைவடைந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த மனுவை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) அமைப்பு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2019, ஏப்.12-ம் தேதி முதல் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி எஸ்பிஐ வங்கிக்கு உச்ச … Read more

“சந்தேஷ்காலி விவகாரத்தில் பாஜக பொய் தகவல்களை பரப்புகிறது” – மோடிக்கு மம்தா எதிர்வினை

கொல்கத்தா: “சந்தேஷ்காலி பற்றி பாஜக பொய்யான தகவல்களைப் பரப்புகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் மேற்கு வங்கம்” என்று அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். மாநில தலைநகர் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெண்கள் அணியின் பேரணி வியாழக்கிழமை நடந்தது. அதில் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சிலர் சந்தேஷ்காலி பற்றி தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து … Read more

சிலிண்டர் மானியம் ரூ.300 திட்டத்தை மேலும் ஓராண்டு நீட்டித்தது மத்திய அரசு!

புதுடெல்லி: பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் சிலிண்டர்களுக்கான மானியத் தொகை ரூ.300-ஐ தொடர்ந்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட (PMUY) பயனாளிகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு … Read more

காங்கிரஸ் 30 – 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது: அசாம் முதல்வர் கருத்து

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 30 – 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வேண்டும் (இந்திய கிரிக்கெட் அணி உறுப்பினர்களைப் போல்) என்பதுதான் எனது விருப்பம். ஆனால், அது நிகழாது. ஆனால், காங்கிரஸ் கட்சி 30 – 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது. … Read more

பாஜகவில் வருண் காந்தி ‘புறக்கணிப்பு’ – தேர்தல் போட்டியில் இருந்து விலக மேனகா திட்டம்?

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் பிலிபித் தொகுதியின் எம்.பி.யான வருண் காந்திக்கு பாஜக மீண்டும் போட்டியிட வாய்ப்பளிப்பது கேள்விக்குறியாகி விட்டது. மகனுக்கு வாய்ப்பு கிடைக்காவிடில் முன்னாள் மத்திய அமைச்சரான தாய் மேனகா காந்தி, தேர்தலில் இருந்து விலகும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கு முதல் கட்சியாக பாஜக தனது சுமார் 200 வேட்பாளர்கள் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது. இதில், அதிக தொகுதிகளாக 80 கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 29 வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இம்மாநிலத்தின் முக்கிய … Read more

தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்: அமித் ஷா தகவல்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் புதிய விதிகள் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் புதிய விதிகள் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்தப்படும். இந்தச் சட்டம் நாட்டுக்கானது. இதனை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அதேபோல், பொது சிவில் சட்டத்தை மதத்தோடு தொடர்புபடுத்துவது துரதிருஷ்டவசமானது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் திட்டம் … Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் – அறிவித்த ராகுல் காந்தி… அதிர்ச்சியில் பாஜக!

Rahul Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ஒரு வருட தொழிற் பயிற்சியுடன் சுமார் 1 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

“காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர்” – பிரதமர் மோடி @ ஸ்ரீநகர்

ஸ்ரீநகர்: சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் புதிய உயரங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப் பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக ஜம்மு காஷ்மீருக்கு இன்று வருகை தந்தார். தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பக்‌ஷி மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், … Read more