ஜம்மு – காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டாக்ஸி – 10 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் டாக்ஸி ஒன்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காஷ்மீரின் ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் அருகே பேட்டரி சாஸ்மா என்ற பகுதியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு டாக்ஸி ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணி அளவில் மழை பெய்து கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டாக்ஸியில் பயணம் செய்த 10 … Read more

மற்றவர்களை மிரட்டுவது காங்கிரஸின் கலாச்சாரம்: பிரதமர் மோடி விமர்சனம்

புதுடெல்லி: ‘‘மற்றவர்களை மிரட்டுவதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம். நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் காங்கிரஸ் கட்சியை நிராகரிப்பதில் ஆச்சர்யம் இல்லை’’ என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்‘‘மற்றவர்களை அச்சுறுத்துவதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம். உறுதிப்பாட்டுடன் கூடியநீதித்துறை தேவை என, காங்கிரஸ் கட்சியினர் 50 ஆண்டுகளுக்கு முன்பு … Read more

குண்டர்-அரசியல்வாதி முக்தார் அன்சாரியின் மரணம் நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

Gangster-Politician Mukhtar Ansari’s Death : மாரடைப்பால் மரணமடைந்த முக்தார் அன்சாரிக்கு சிறையில் ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு… அரசியல்வாதியாக மாறிய முன்னாள் ரவுடியின் அரசியலும் பின்னணியும்.. 

அமலாக்க துறை சம்மனை புறக்கணித்த மஹுவா மொய்த்ரா

கொல்கத்தா: அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா நேற்று புறக்கணித்தார். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மக்களவை நெறிமுறை குழுவின் விசாரணைக்கு பிறகு அவர்எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். லஞ்ச வழக்கில் அந்நியச் செலாவணி சட்ட விதிமீறல் தொடர்பாக மார்ச் 28-ம் தேதிவிசாரணைக்கு ஆஜராகும்படி தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி மற்றும் மஹுவாவுக்கு அமலாக்கத் துறை … Read more

அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித் துறையை காக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்

புதுடெல்லி: அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித் துறையைப் பாதுகாக்க வேண்டும் என்று 600 மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, பிங்கிஆனந்த் உட்பட 600 வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடந்த 26-ம் தேதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒரு காலத்தில் நீதித் துறை சிறப்பாக செயல்பட்டது. அந்த காலம் நீதித் துறையின் பொற்காலம். இப்போதைய நீதிமன்றங்களின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது … Read more

100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு: மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: கிராமப்புறங்களில் 100 நாள் வேலையை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 4 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகம், புதுச்சேரியில் தினசரி ஊதியம் ரூ.319 ஆக அதிகரித்துள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் கடந்த 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் கிராமங்களில் வசிக்கும் குடும்பத்தில் … Read more

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

சென்னை: “தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு திமுக எதிர்வினையாற்றியுள்ளது. இது தொடர்பாக பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறும்போது, “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அற்பமான காரணங்களைக் கூறி தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒளிகிறார். தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. … Read more

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு பெண் குழந்தை – குவியும் வாழ்த்து

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் மற்றும் அவரது மனைவி குர்பிரீத் கவுருக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து இருவருக்கும் ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று குழந்தை பிறந்தது. இதனை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட முதல்வர் பகவந்த் சிங் மான், “கடவுள் ஒரு மகளை பரிசாகக் கொடுத்துள்ளார். தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்” என்று கூறி குழந்தையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். பகவந்த் … Read more

உ.பி சிறையில் இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மரணம்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். மவூ தொகுதியின் எம்எல்ஏ-வாக அவர் பணியாற்றி உள்ளார். அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் காரணமாக பாண்டா சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வந்தார். 63 வயதான அவர் கடந்த 26-ம் தேதி அதிகாலை வயிற்று வலி காரணமாக பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது குறித்த தகவல் அவரது குடும்பத்தினர் … Read more

‘இளம் மம்தா’, உள்ளூர் போராளி… – யார் இந்த சயோனி கோஷ்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகளான ரோகிணி ஆச்சார்யா, மைசூர் தொகுதியில் பாஜக சார்பில் மைசூர் மன்னர் குடும்ப வாரிசான யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார் உள்ளிட்ட பல புது முகங்களைப் பற்றி பார்த்தோம். அந்த வரிசையில், பெங்காலி நடிகையும், அரசியல்வாதியுமான சயோனி கோஷ் மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் … Read more