இவரைப் பற்றிய ரகசிய தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டொலர் பரிசு! அமெரிக்கா அறிவிப்பு..


ஐ.எஸ்.ஐ.எஸ்- கே தலைவன் குறித்து ரகசிய தகவல் கொடுபவருக்கு 10 மில்லயன் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்- கே (Islamic State – Khorasan) பயங்கரவாத அமைப்பின் தலைவன் சனாவுல்லா கபாரி (Sanaullah Ghafari) குறித்து தகவல் தருவோருக்கு, 10 மில்லியன் டொலர் பரிசு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 26, 2021 அன்று ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் – கொராசன் பயங்கரவாத அமைப்பு மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.

இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 13 பேர் உட்பட, 185 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அமைப்பின் தலைவன் சனாவுல்லா கபாரியின் தலைக்கு அமெரிக்க அரசு 10 மில்லயன் டொலர் (இலங்கை ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 202 கோடி) வெகுமதியை அறிவித்துள்ளது.

1994 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பிறந்த கஃபாரி, ISIS-K பயங்கரவாத அமைப்பின் தற்போதைய தலைவர் என்றும், ஆப்கானிஸ்தான் முழுவதிலும் உள்ள அனைத்து ISIS-K நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிப்பதற்கும், நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியுதவி செய்வதற்கும் பொறுப்பானவர் என்றும் கூறப்படுகிறது.

கடந்த, 2020 ஜூனில், ஆப்கனில் ஐ.எஸ்.ஐ.எஸ் – கொராசன் பயங்கரவாத அமைப்பின் தலைவராக, அல் – முஹாஜிர் எனப்படும் சனாவுல்லா கபாரி நியமிக்கப்பட்டார். அவர் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுவது, தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் ஈடுபட்டு வருகிறார்.

Sgnal, WhatsApp, Telegram அல்லது எங்களது Tor-based tips-reporting line வாயிலாக சனாவுல்லா குறித்து தகவல் அளிக்கலாம் என்று அமெரிக்காவின் Rewards For Justice அமைப்பு அறிவித்துள்ளது. துப்பு தருவோரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.