உடனே வெளியேறுங்கள்: நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள்!

உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு
ரஷ்யா
கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு
அமெரிக்கா
ஆதரவு அளித்து வருவதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா தனது படைகளை
உக்ரைன்
எல்லையில் குவித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், உக்ரைன் மீது எந்த நேரமும் ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது முழுமையாக படையெடுப்பதற்கு தேவையான ராணுவ படைகளில் 70 சதவீதத்தை ரஷ்யா திரட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.

“உக்ரன் எல்லை நோக்கி ரஷ்ய படைகள் செல்லாது என்று நினைக்கிறேன். ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் இதனை மாட்டார் என நினைக்கிறேன். ஒருவேளை உக்ரைன் மீது படையெடுத்தால், உக்ரைன் எல்லை நோக்கி அவர்களது ராணுவம் முன்னேறும் பட்சத்தில், இதுவரை கண்டிராத பொருளாதார தடைகளை ரஷ்யா பார்க்க நேரிடும். ரஷ்யாவுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த எங்கள் கூட்டாளிகள் தயாராக உள்ளனர்.” என்று அமெரிக்க அதிபர்
ஜோ பைடன்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசியால் சுவாச உறுப்புகளுக்கு பாதுகாப்பு இல்லை: புதிய முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள்!

இதனிடையே, ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து 10 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன. ரஷ்யாவின் சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், உக்ரைன் எல்லையில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், அமெரிக்க அதிபரி ஜோ பைடன் அமெரிக்க மக்கள் உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தி உள்ளார். மேலும் அமெரிக்க மற்றும் ரஷ்ய படைகள் சண்டையிடும் போது ஒருவரையொருவர் தாக்கி கொண்டால் ரஷ்யாவுடன் பெரும் மோதலை ஏற்படுத்த கூடும் என்றும் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.