இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் – கேப்டன் ரோஹித் ஷர்மா பாராட்டு

அகமதாபாத்:
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
இந்தியா சார்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டும், தீபக் சாஹர், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மா பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணியின் மிகப் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது. 
இந்த சாதனை மிக மகிழ்ச்சிகரமானது என அவர் தெரிவித்துள்ளார். போட்டி நிறைவுக்கு பின்னர் இது குறித்து ரோஹித் சர்மா பேசியதாவது:
நிச்சயமாக அந்த எண்களை பார்க்கவில்லை. இந்தத் தொடரில் இருந்து நாங்கள் எதைப் பெற விரும்புகிறோமோ, அது எங்களுக்குக் கிடைத்தது. 
நாம் விளையாடும் வரை சத்தம் இருக்கும். மக்கள் நம்மைப் பார்க்கிறார்கள், எல்லோரும் நம்மைப் பார்க்கிறார்கள். வீரர்களாக, தனிநபர்களாக, நாம் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். 
உண்மையில் வேகப்பந்து வீச்சாளர்களைப் பார்ப்பது நன்றாக இருந்தது. சிராஜ் மிகவும்  ஈர்க்கப்பட்டார். ஷர்துலும் தீபக்கும் சிறப்பாக செயல்பட்டனர். குல்தீப் மற்றும் சாஹல் இருவரும் எங்களுக்கு முக்கியமான வீரர்கள். அவர்களுக்கு நம்பிக்கையை கொடுப்பது முக்கியம்.இவ்வாறு அவர் குறிபிட்டார். 
ஒருநாள் தொடர் தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி உள்ளார்.இது குறித்து அவர் பேசியதாவது:
இந்தியாவுக்கு வாழ்த்துகள் சொல்ல வேண்டும்.தொடரில் நாங்கள் பந்துவீசிய விதம் அற்புதமாக இருந்தது. 50 ஓவர்களில் நிறைய வேலை இருக்கிறது. 
கடந்த இரண்டு ஆட்டங்களில் வீரர்கள் பந்துவீச்சு அருமையாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் செயல்படும் விதம் குறித்து நிறைய வேலைகள் உள்ளன. இவ்வாறு பூரன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.