ஒரு நாள்.. ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமர் ஆவார்.. ஓவைசி

அனைவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக ஹிஜாப் அணிந்த பெண் பதவியில் அமருவார் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர்
அசாதுதீன் ஓவைசி
கூறியுள்ளார்.

கர்நாடக ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது. உத்தரப் பிரதேச தேர்தலிலும் இதை வைத்து பிரசாரம் நடந்துள்ளது. இந்த நிலையில் ஓவைசி பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தனது டிவிட்டரில் அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ஒரு பெண் ஹிஜாப் அணிய முடிவு செய்து விட்டால், அதை தனது பெற்றோரிடம் கூறி விட்டால், பெற்றோர்களும் அனுமதித்து விட்டால், அப்பெண்ணை யாரால் தடுக்க முடியும். கண்டிப்பாக யாராலும் தடுக்க முடியாது.

பெண்கள் ஹிஜாப் அணிவார்கள், நிக்காப் அணிவார்கள், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வார்கள், டாக்டர் ஆவார்கள், கலெக்டர் ஆவார்கள், தொழிலதிபர்கள் ஆவார்கள்.

அனைவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நான் அப்போது உயிருடன் இருப்பேனோ இல்லையோ, கண்டிப்பாக இந்தியாவின் பிரதமராக ஒரு ஹிஜாப் அணிந்த பெண் பதவியில் அமர்வார் என்று ஓவைசி கூறியுள்ளஆர்.

ஹைதராபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஓவைசி, அகில இந்திய மஸ்ஜில்ஸ் இ இத்தாஹிதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவராக இருக்கிறார். உ.பி. சட்டசபைத் தேர்தலை பாகிதாரி பரிவர்த்சன் மோர்ச்சா என்ற அணியை அமைத்து சந்தித்துள்ளார். ஜன் அதிகார் கட்சியுடன் அவர் கூட்டணி வைத்துள்ளார். இவரது கட்சி பீகார் தேர்தலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் உ.பி.யில் ஓவைசி கட்சிக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.