அனுதாபத்தில் வாக்களிக்காதீர்… என் 10 ஆண்டு சேவையை பாருங்கள்! – மதுரையில் மாற்றுத்திறனாளி அதிமுக வேட்பாளர்

மதுரை: அனுபதாபத்தை உருவாக்கி கட்சியில் ‘சீட்’ பெறுவது, அதையே மூலதனமாக கொண்டு தேர்தலில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களுக்கு மத்தியில் மதுரை திருமங்கலம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் 26-வது வார்டு அதிமுக வேட்பாளர் கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி எஸ்.செல்வராஜ் சற்று வித்தியாசமானவர்.

வாக்காளர்களிடம் தவிழ்ந்து சென்று ஆதரவு கேட்கும் இவர், ‘‘நான் இப்படியிருப்பதால் அனுதாபத்தில் யாரும் வாக்களிக்க வேண்டும். எந்த பதவியும், அதிகாரமும் இல்லாமல் கடந்த 10 ஆண்டாக நமது பகுதியில் செய்த என்னுடைய சமூகப்பணியைப்பார்த்து வாக்களியுங்கள்,’’ என்று அவர் பிரச்சாரம் செய்யும் விதம் மக்களை கவர்ந்துள்ளது.

மாற்றுத்திறானளி என்பதால் வீட்டில் முடங்கி கிடக்காமல் சொந்தமாக தொழில் வைத்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவதோடு சமூகப்பணிகளை செய்து வரும் அவர் கூறுகையில், ‘‘நான் போட்டியிடும் 26வது வார்டில் 10 ஆண்டிற்கு மேலாக மக்கள் பணி செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் 102 மின்கம்பங்கள் உள்ளன. அதில் உள்ள தெருவிளக்குளை தினமும் சென்று தவறாமல் போடுவது, வீடு வீடாக நகராட்சி பணியாளர்களை குப்பை சேகரிக்க வைப்பது போன்ற பணிகளை தொடர்ச்சியாக செய்கிறேன். அதுபோக கரோனா காலத்தில் எங்கள் வார்டு பகுதியில் மக்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கு முடங்கி கிடந்தபோது அதிமுக கட்சி வழங்கிய காய்கறி தொகுப்பு, அரிசி வீடுகள் தோறும் சென்று விநியோகம் செய்தேன்.

என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் யாரும் அடையாள அட்டை இல்லாமல் உதவித்தோகை கிடைக்காதவர்களுக்கு அடையாள அட்டை வாங்கி கொடுத்து உதவித்தோகை பெற்றுக் கொடுத்துள்ளேன். முதியோர் உதவித்தொகை மட்டுமே 13 பேருக்கு வாங்கி கொடுத்துள்ளேன். பொங்கல் பண்டிகை காலங்களில் வயதானவர்களை அலையவிடாமல் அரசு வழங்கும் இலவச வேஸ்டி, சேலை வாங்கி கொண்டு வந்து கொடுக்கிறேன். தெரு நாய்கள் தொல்லை, யாரும் வீட்டு இறப்பு நிகழ்ச்சியென்றாலும் முதல் ஆளாக போய்நிற்பேன்.

தவழ்ந்துச் சென்று வாக்குசேகரிக்கும் <a href=அதிமுக வேட்பாளர்” height=”700″ src=”https://static.hindutamil.in/hindu/uploads/common/2022/02/15/16449390343060.jpg” width=”700″ />
தவழ்ந்துச் சென்று வாக்குசேகரிக்கும் அதிமுக வேட்பாளர்

எங்கள் பகுதியில் 40 ஆண்டாக ஒரு 15 வீடுகளுக்கு குடிநீர் குழாய் வழங்குவதில் பிரச்சனை இருந்தது. அந்த பிரச்சனையை நகராட்சி மூலம் அப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு குடிநீர் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்தேன். அதனால், கட்சித் தலைமை நான் இப்படியிருப்பதால் பரிதாபத்தில் ‘சீட்’ வழங்கவில்லை. 10 ஆண்டாக கட்சிப்பணி, மக்கள் பணியைப்பார்த்து தலைமை ‘சீட்’ வழங்கியிருக்கிறது. நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. அதனால், நான் மாற்றுத்திறனாளிகள் என்பதால் அனுதாபத்தில் யாரும் வாக்களிக்க வேண்டாம். என்னுடைய சமூகப்பணியைப்பார்த்து வாக்களியுங்கள். நான் எந்த அதிகாரமும் இல்லாமல் இருந்தே பணி செய்துள்ளேன். கவுன்சிலர் பதவி கிடைத்தால் இன்னும் கூடுதலாக பணி செய்வேன். மனைவி, 2 குழந்தைகள் உள்ளன. பிஸ்கட் ஏஜென்சி வைத்துள்ளேன். வீடு வாடகைக்கு பிடித்து விடுவது போன்ற பகுதி நேர வேலைகளையும் பார்க்கிறேன், ’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.