கொள்ளை அடிப்பவர்களை இனியும் தலையில் தூக்கிவைத்து ஆட வேண்டாம்: கமல்ஹாசன் பிரச்சாரம்

Tamilnadu Local Body Election : தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் 17-ந தேதியுடன் முடியவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மதுரையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் கூறுகையில்,

அடுத்த முறை இவர்களை வெற்றி பெற வைத்தால் எனக்கு நன்றி சொல்லப்போவது அவர்கள் இல்லை நீங்களாகத்தான் இருக்கும். அப்படி வேலை செய்தாக வேண்டும். இது சரித்திரம் நமக்கு கொடுத்திருக்கு வாய்ப்பு. உங்களுக்கு கிடைத்த தெருவை நீங்கள் சொந்தமாக அதை பெருக்கி சுத்தம் செய்து உங்கள் வீடு மாதிரி செய்து காட்டினீர்கள் என்றால் அதற்கு இணையாக அவர்களால் செய்ய முடியாது.

அவர்கள் என்றால், பொய் வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். வியாபாரம் செய்துகொண்டிருப்பவர்கள். அவர்களால் இதையெல்லாம் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்கள் வந்தது வியாபாரத்திற்கு ஆனால் நீங்கள் வந்தது கடமையை செய்ய அதை சரியாக செய்தால் சரித்திரம் மாறும். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் வந்தே தீரும். அதை இங்கு அடிமட்டத்தில் இருந்து தொடங்கி வையுங்கள்.

இது சின்ன கட்சிதான் தொடங்கி கொஞ்ச நாள் தான் ஆகிறது. குழந்தை தான். சில சமயம் நல்ல குழந்தைகள் நாளைய தலைவர் ஆவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளாக நாம் இருப்பபோம். கொடுத்த வாக்குறுதிகளை ஞாபகம் வைத்துக்கொண்டால் மக்கள் நம்மை ஞாபகம் வைத்திருப்பார்கள். அப்படி இருந்தால் அடுத்த தேர்தலுககு நான் வரவே வேண்டாம். அவர்களுக்கு போட்டுவிடலாம் வெற்றி விழாவுக்கு அவரை அழைத்துக்கொள்ளலாம் என்று சொல்வார்கள்.

நல்லவர்களை தூக்கிப்பிடித்தால் நல்லதே நடக்கும். இல்லை என்றால் எல்லாவற்றிற்கும் லஞ்சம் கொடுத்துக்கொண்டிக்கும் சூழல் உருவாகும். சேவை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வரும் ஊரை கொள்ளையடிப்பவர்களை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு ஆடியதால் தான் இன்றைக்கு ஊர் இப்படி சீரழிந்துவிட்டது. இது போதும் மாற்றத்திற்கான ஏற்பாட்டை நீங்களே செய்யுங்கள். அது உங்கள் கையில்தான் உள்ளது. குடியரசு என்பதற்காக முழு அர்த்தம், ஜனநாயகத்தை உங்கள் கையில் எடுத்தக்கொள்ளுங்கள்.

குடியரசு என்றால், கடையில் போய் குடிப்பது அல்ல. இது வேறு குடியரசு. அதற்கான பலமான ஆயுதம் உங்கள் கையில் உள்ளது. அதுதான் ஓட்டு. அதை பண்டமாற்று வியாபராத்திற்கு பயன்படுத்தி விடாதீர்கள் அவர்கள் கொண்டுக்கும் பணம் எவ்வளவாக இருந்தாலும் அது பத்தாது. அது பொய். இன்றைக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கவுன்சிலராக நிற்பதற்கு வந்தார் என்றால் அந்த ஒரு கோடி ரூபாயை திரும்ப எடுக்காமல் விடுவாரா? அதனால் அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்

இவர்களுக்கு ஓட்டு போடுறீங்களோ இல்லையே அவர்களுக்கு போடாதீர்கள். இவர்களுக்கு ஓட்டு போடுவது உங்கள் கடமை அதை ஞாபகப்படுத்தத்தான் முடியும். அதற்குமேல் எப்படி கெஞ்ச முடியும். எங்களிடம் காசு இல்லை. காசு நிறைய உள்ளது ஆனால் அது திருடர்கள் கையில் போய் சேர்ந்துகொண்டே இருக்கிறது. அதை திரும்ப உங்கள் வீதிக்கு கொண்டு வாருங்கள். அதை உங்கள் குடிநீராக மாற்றுங்கள் உங்கள் குழந்தைகளின் எதிர்காலமாக மாற்றுங்கள் அப்படி செய்தால் நாளை நமதே என்று கூறியுள்ளார்.   

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.