உலகளவில் கொரோனா பாதிப்பு 19 சதவீதம் சரிவு..!! உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா, 
உலகளவில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிந்த ஒரு வார காலத்துக்கான கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* கடந்த வாரத்தில் உலகமெங்கும் 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 75 ஆயிரம் பேர் தொற்றுக்கு பலியாகி உள்னனர்.

* உலகளவில் ஒரு வார கால தொற்று பாதிப்பு 19 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இறப்புகள் நிலையாக உள்ளன.
* ஆஸ்திரேலியா, கம்போடியா, சீனா, பிஜி, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், தென்கொரியா உள்ளிட்ட 37 நாடுகளைக் கொண்ட மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் தொற்று பாதிப்பு 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
* தென்கிழக்கு ஆசியாவில் 37 சதவீதம் சரிவு அடைந்துள்ளது. உலகளவில் இது மிகப்பெரும் சரிவு ஆகும்.
* மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா இறப்பு 38 சதவீதம் அதிகரித்துள்ளது.
* புதிய பாதிப்புகள் அதிகளவில் ரஷியாவில் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் பாதிப்புகள் சமீப வாரங்களில் இரு மடங்கு ஆகி உள்ளது. இது ஒமைக்ரான் வைரசால் வந்த வினை ஆகும்.
* ஆல்பா, பீட்டா, டெல்டா உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து வீழ்ந்துள்ளது. ஒமைக்ரான் தொற்று அவற்றை வெளியேற்றி உள்ளன.
* ஒரு வாரத்தில் 4 லட்சம் மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனைகள் பதிவாகி உள்ளன. இதில் 98 சதவீதத்துக்கும் கூடுதல் ஒமைக்ரான் பாதிப்புதான் என கண்டறியப்பட்டது.
* ஒமைக்ரானின் பிஏ.2 வகை நிலையாக அதிகரித்து வருகிறது. தென் ஆப்பிரிக்கா, டென்மார்க், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் எழுச்சி பெறுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.