சின்ன சின்னதாய்| Dinamalar

சின்ன சின்னதாய்இயேசு சிலை அகற்றம்முல்பாகலின் கோகுண்டே கிராமத்தில் சிறிய மலை உள்ளது. இது அரசு நிலம். இதில் 25 ஆண்டுகளுக்கு முன் 20 அடி உயர இயேசு சிலை நிறுவப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவின்படி முல்பாகல் தாலுகா தாசில்தார் சோபிதா தலைமையில் போலீசார் உதவியுடன் அகற்றும் பணி நேற்று துவங்கியது. இக்கிராமத்தில் 100 வீடுகள் உள்ளன. இதில் 1,100 கிறிஸ்துவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இயேசு சிலை அகற்றியதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. கல்வி உதவித் தொகைஎஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., வகுப்புகளில் 85 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள ஆதி ஜாம்பவாமாதிகா சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று ஆதி ஜாம்பவா மடத்தின் அறக்கட்டளை தலைவர் சிக்க வெங்கடசாமி தெரிவித்துள்ளார்.அவர் நேற்று அளித்த பேட்டி:ஆவனி மலையில் உள்ள ஸ்ரீ ராமலிங்கேஸ்வர சுவாமி பிரம்ம ரதோற்சவ விழாவை முன்னிட்டு சீதையம்மன் மலையில் நடக்கும் விழாவில் ஆதி ஜாம்பவா பாலிகா சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக ஜாதி சான்றிதழ், எஸ்.எஸ்.எல்.சி., – பி.யு.சி., இறுதி ஆண்டு கல்வி மதிப்பெண் பட்டியல் விபர சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 74831 67199,. 92411 11243 ஆகிய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.வீடுகட்ட நிதியுதவிசீனிவாசப்பூர் டவுன் சபை தலைமை அதிகாரி சீனிவாஸ் நேற்று கூறியதாவது:சீனிவாசப்பூர் டவுன் சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 2021- – 22 ம் ஆண்டுக்கான வாஜ்பாய் வசதி யோஜ்னா, அம்பேத்கர் நிவாஸ் யோஜ்னா திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு எண், வீட்டு முகவரி ஆகியவைகளை இணைத்து சீனிவாசப்பூர் டவுன் சபையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கோசாலை ‘ஷெட்’ அகற்றம்தங்கவயல் கோடிலிங்கேஸ்வரா கோவில் அருகே கோவில் நிறுவனர் சாம்பசிவ மூர்த்தியின் மகன் டாக்டர் சிவபிரசாத் கோசாலை ஏற்படுத்த ‘ஷெட்’ அமைத்திருந்தார். இதை கோவில் நிர்வாகி குமாரி, மேலாளர் சம்பங்கி, காவலர் தண்டபாணி ஆகியோர் அகற்றியதாக பெமல் நகர் போலீசில் சிவபிரசாத் நேற்றுபுகார் செய்தார். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடி லிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. தற்போது கோசாலை அகற்றிய வழக்கும் புதியதாக சேர்ந்துள்ளது.நியமன உறுப்பினர்கள் பதவியேற்புகோலார் நகராட்சிக்கு சுரேஷ், சதீஷ் ஆகிய இருவர் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும,் கோலார் நகராட்சி ஆணையர் பிரசாத்திடம் அரசு உத்தரவு கடிதத்தை நேற்று வழங்கி பதவியேற்றனர். நகராட்சி தலைவர் ஸ்வேதா வரவேற்றார். சமூக அக்கறையுடன் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவாறு சேவை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.கோலார் நகராட்சி கூட்டம்கோலார் நகராட்சி மாதாந்திர கூட்டம் நகராட்சி அரங்கில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் ஸ்வேதா தலைமை வகித்தார்.நகராட்சி ஆணையர் பிரசாத் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். நகராட்சியின் 35 வார்டுகளின் உறுப்பினர்களும் அபிவிருத்தி பணிகள் குறித்து விவாதித்தனர். ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்படி மேற்கொண்ட பணிகள் பற்றிய விபரங்களை கேட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. குப்பைகள் அகற்றுதல், குடிநீர் பிரச்னை, சாலை மேம்பாடு, மின் விளக்குகள் அமைப்பது குறித்து உறுப்பினர்கள் வாதிட்டனர்.மாணவர்களுக்கு மனித நேயம்’ஜூனியர் ரெட் கிராஸ்’ என்ற நுாலை கோலார் மாவட்ட கல்வித்துறை இணை இயக்குனர் ரேவண்ண சித்தய்யா வெளியிட்டார்.கோலார் ஸ்கவுட் பவனில் செஞ்சிலுவை சங்கத்தினர் மாணவர்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வில் நுாலை வெளியிட்டு மாவட்ட கல்வி இணை இயக்குனர் ரேவண்ண சித்தய்யா பேசுகையில், ”மாணவர்களுக்கு கல்வி அறிவு மிக அவசியம். அத்துடன் சமூக நலன் மீதும் அக்கறை வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் சாரணர் இயக்கம் ஆரம்பிப்பதன் நோக்கத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். ஒழுக்கம், மன கட்டுப்பாடு, பிறருக்கு உதவுதலை உணர வேண்டும். மனித நேயத்துடன் செயல்பட முன் வர வேண்டும்,’ என்றார்.வீரேந்திர சுவாமி பிரதிஷ்டைபங்கார்பேட்டை காரஹள்ளி கிராமத்தில் வீரேந்திர சுவாமி கோவிலில் நேற்றுசுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்காக ஹோம பூஜைகள், கலச பூஜை, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.