அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது – மாநில அரசு இப்படியொரு ஷாக்!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.

அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆக உள்ளது. இதை 57 ஆக அதிகரிக்க கேரள மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரள மாநிலத்தில் மட்டுமே அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆக இருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆகவும், சில மாநிலங்களில், 60 ஆகவும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மண் சாண்டி, 2011 – 16 வரை ஆட்சியில் இருந்த போது, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 56 ஆக நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தார். தற்போது வரை இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 56ல் இருந்து 57 ஆக அதிகரிக்க கேரள மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு, 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் போது வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் நேற்று, இது தொடர்பாக, கேரள மாநில நிதித் துறை அமைச்சர் கே.எல்.பாலகோபால் தெரிவித்ததாவது:

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் திட்டம் அரசிடம் இல்லை. எனினும், வரவு செலவுத் திட்டத்தை உயர்த்துவது தொடர்பாக பல அறிக்கைகள் மாநில அரசிடம் இருக்கின்றன. மேலும், அரசு ஊழியர்களை பணி அமர்த்துவதற்கான நடைமுறைகள் படிப்படியாக முன்னேறும். இதே போல், நலத்திட்ட ஓய்வூதியம் பெறும் தகுதியற்ற நபர்களை ஒடுக்கும் நடைமுறைகள் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே இன்று, திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில், மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையுடன், 2022 – 23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.