Airtel, Jio டெலிகாம் நிறுவனங்கள் அதிர்ச்சி – திடீர் மாற்றத்தால் மாஸ் காட்டும் BSNL!

Airtel, Jio, Vodafone Idea ஆகிய மூன்று பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் நாட்டில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், பொதுத் துறை நிறுவனமான
பி எஸ் என் எல்
, குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தற்போது நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை வழங்குவதில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

என்னதான் குறைந்த அளவு வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தாலும், பிற நிறுவனங்கள் அனைத்தும் கடந்த 2021 நவம்பர் மாதத்தில் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. இது BSNLக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுமார் ஒரு கோடியே 29 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பாரதி ஏர்டெல், பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இதுகுறித்த தகவலை ஒன்றிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது.

110 நாள்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் புதிய ரீசார்ஜ் திட்டம்!

குறையும் ஜியோ வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்த போதிலும், ரிலையன்ஸ் ஜியோ சந்தையில் அதிக வாடிக்கையாளர்களுடன் முதலிடத்திலேயே நீடிக்கிறது. இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ 36% விழுக்காடு பங்குகளை கொண்டிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து பாரதி ஏர்டெல் 30.81% விழுக்காடு பங்குகளை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாரதி ஏர்டெல் நெட்வொர்க்கில் சுமார் 4.5 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jio ரீசார்ஜ்: அளவில்லா 3ஜிபி டேட்டா திட்டங்கள்… அள்ளித்தரும் ஜியோ!

முறையே வோடபோன் ஐடியா நிறுவனம் 23% விழுக்காடு பங்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 9% விழுக்காடு சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் விலையேற்றத்துக்கு பின் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் நெட்வொர்க்கை மாற்றியுள்ளனர். அதன் பலனாக 2021 டிசம்பர் மாதத்தில் மட்டும் BSNL நெட்வொர்க்கில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்துள்ளனர்.

மீட்சிபெறும் பிஎஸ்.என்.எல்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 116.75 கோடியில் இருந்து 115.46 கோடியாக குரைந்துள்ளது. நகர பகுதிகளில் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 63.84 கோடியில் இருந்து 63.33 கோடியாக குறைந்துள்ளது. ஊரக பகுதிகளில் இந்த எண்ணிக்கை 52.90 கோடியில் இருந்து 52.12 கோடியாக குறைந்து இருக்கிறது.

செட்டப் ஒன்னு தான்… ஆனா கெட்டப் வேற… Airtel-இன் குளறுபடி திட்டம்!

டிசம்பர் 31, 2021 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 36% விழுக்காடு சந்தையை பிடித்து இருக்கிறது. இதன் ஆக்டிவ் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 87.64% விழுக்காடாக இருந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ சலுகை கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து பலர் BSNL-ஐ தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

BSNL தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (C-DoT) ஆகியவற்றுடன் இணைந்து 4G சோதனைகளை நடத்தி வருகிறது. சோதனைகள் பிப்ரவரி இறுதிக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. மேலும் BSNL இறுதியாக இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் 4G சேவைகளை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sell Old Phone: பழைய போனுக்கு நல்ல விலை வேண்டுமா… கவலைய விடுங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.