இதன் காரணமாகத்தான் சிம்பு- தனுஷ் சேரவில்லையாம்..பல ஆண்டுகள் கழித்து வெளியான தகவல்..!

நடிகர்
சிம்பு
மற்றும்
தனுஷ்
இருவரும் சமகால முன்னணி நடிகர்கள். இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி கொடிகட்டி பறந்துவருகிறார்கள். ரஜினி மற்றும் கமல், விஜய் மற்றும் அஜித் என இந்த வரிசையில் தனுஷ் மற்றும் சிம்புவும் இடம்பெறுவர். சினிமா துறையில் இருவரும் போட்டிநடிகர்களாகவே பார்க்கப்பட்டனர்.

மேலும் சினிமாவை தாண்டியும் இருவருக்குள்ளும் பனிப்போர் இருந்துவந்தகாக சில தகவல்கள் வந்தன.
காதல் கொண்டேன்
படத்தைப்பார்த்த சிம்பு அதுபோலவே நாமும் ஒரு படம் எடுக்கவேண்டும் என்று கருதி
மன்மதன்
படத்தை எடுத்து வெற்றி கண்டார்.

அதைப்போல தம், குத்து ஆகிய படங்களின் கமர்ஷியல் வெற்றிகளை பார்த்த தனுஷ் தானும் கமர்ஷியல் வெற்றியை கொடுக்கவேண்டும் என கருதி திருடா திருடி படத்தை கொடுத்தார். எனவே அந்த காலத்தில் இருந்து இருவருக்குள்ளும் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவிவருகிறது.

ரஜினியை இயக்கப்போகும் அருண்ராஜா காமராஜ்..இது லிஸ்ட்லயே இல்லையே பா..! தயாரிப்பாளர் யார் தெரியுமா ?

இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் எப்படி ஒரே படத்தில் சேர்ந்து நடித்தார்களோ அதேபோல் சிம்பு மற்றும் தனுஷும் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கவிருந்தனர் என்ற தகவல் தற்போது வெளியாகிவுள்ளது.
வெற்றிமாறன்
இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டே உருவாகவிருந்த படம் தான்
வடசென்னை
.

அதன் பிறகு சில காரணங்களால் இப்படம் 2018 ஆம் ஆண்டுதான் வெளியானது. எனவே இந்த படத்திற்கு முதலில் இரண்டு ஹீரோ கதையாகத்தான் வெற்றிமாறன் உருவாக்கியிருந்தாராம். அதில் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் நடிக்க ஒப்புக்கொண்டார்களாம். பின்பு சிம்பு சில படங்களின் கால் சீட் பிரச்சனைகளால் அவரால் நடிக்கமுடியாமல் போனது.

பின்பு இந்த படத்தை கைவிட்டுவிட்டு ஆடுகளம் படத்தை எடுத்தார் வெற்றிமாறன். பிறகு சில ஆண்டுகள் கழித்து வடசென்னை எடுக்க ஆரம்பித்தார் வெற்றிமாறன். இரண்டு ஹீரோ கதையாக இருந்த வடசென்னை படத்தின் கதையை மாற்றி தனுஷை மற்றும் ஹீரோவாக வைத்து எடுத்தார்.

படமும் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் 2010 ஆம் ஆண்டே சிம்பு மற்றும் தனுஷ் நடித்திருந்தால் செமையாக இருந்திருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

அனைவரின் மனசையும் கவரும் மருத – மனம் திறந்த ராதிகா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.