ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி…கடைசில இப்படி ஆகிட்டே..!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக
நெல்சன்
இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கின்றார். அண்ணாத்த படத்திற்கு பிறகு
ரஜினி
படம் நடிப்பாரா மாட்டாரா என்ற கவலை ரசிகர்களின் மத்தியில் இருந்து வந்தது. அதனை போக்கும் வகையில் ரஜினி சமீபத்தில் தனது அடுத்த அறிவிப்பை வெளியிட்டார்.

கலக்கலான ப்ரோமோவில் ரஜினி செம ஸ்டைலிஷாக இருந்தார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது. இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படத்தைப்பற்றிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியானது.

ரஜினியின் பெயரை சொல்லி இதெல்லாம் செய்தாரா கஸ்தூரி ராஜா ? திடுக்கிடும் தகவல்கள்..!

கனா படத்தை இயக்கிய
அருண்ராஜா காமராஜ்
இயக்கத்தில்
போனி கபூர்
தயாரிப்பில் ரஜினி நடிப்பதாக தகவல்கள் வந்தன. இந்த தகவல்களால் ரஜினி ரசிகர்கள் டபுள் சந்தோஷத்தில் இருந்தனர்.அனால் இந்த சந்தோஷத்திற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது போனி கபூர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளது , ” ரஜினி சார் எனது பல வருட நண்பர்.நாங்கள் அடிக்கடி சந்தித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம்.நாங்கள் இணைந்து பணியாற்றும் ஒரு படத்தை இறுதி செய்தால் அதை நான் தான் முதலில் அறிவிப்பேன்..இதுபோன்ற தவறான செய்திகளை நீங்கள் நம்பவேண்டாம் என பதிவிட்டுள்ளார்.இதனைக்கேட்ட ரஜினி ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.