309 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு| Dinamalar

புதுச்சேரி : எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 309 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான ஏற்பாடு நடந்து வருகிறது.இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும் 25ம் தேதிக்குள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்ட கலந்தாய்வு முடிவில், அரசு மருத்துவக் கல்லுாரியில் 7, மூன்று தனி யார் கல்லுாரிகளில் 14 என இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ளன.என்.ஆர்.ஐ., சிறுபான்மை, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 290 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. ஒட்டு மொத்தமாக 309 எம்.பி.பி.எஸ்., சீட்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.