அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – வீட்டு வாடகைப்படி உயர்வு!

அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படியை உயர்த்தி மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு, 11வது ஊதிய திருத்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அம்மாநில அரசு ஊதிய உயர்வு அளித்தது. ஆனால் இதற்கு
அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பழைய முறைப்படி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என, முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து அரசு பரிசீலிக்காததால், அதிருப்தி அடைந்த ஆயிரக் கணக்கான அரசு ஊழியர்கள், கடந்த 3 ஆம் தேதி விஜயவாடாவில் மாபெரும் பேரணி நடத்தினர். மேலும், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர். இதை அடுத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்து, அதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியது.

இந்நிலையில், அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு பலனாக, அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படியை உயர்த்தி ஆந்திர மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஆந்திர பிரதேச அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அதிகபட்ச உச்சவரம்பு ரூ.25,000 உடன்,
வீட்டு வாடகைப்படி
24 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அமராவதியில் உள்ள மாநிலச் செயலகம் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட துறைத் தலைவர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இது பொருந்தும். இந்த நடைமுறை, வரும் 2024 ஆம் ஆண்டு மாதம் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாவட்டத் தலைமையகம் மற்றும் முக்கிய நகரங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 16 சதவீத வீட்டு வாடகைப்படியுடன், அதிகபட்ச உச்ச வரம்பு ரூ.17,000 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 50,000 முதல் இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் உள்ளவர்களுக்கு 12 சதவீத வீட்டு வாடகைப்படியுடன், உச்சவரம்பு ரூ.13,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் வீட்டு வாடகைப்படியாக வழங்கப்படும் என்றும், திருத்தப்பட்ட வீட்டு வாடகைப்படி உயர்வு, 2022 ஜனவரி 1 முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.