ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முறைப்படி கோரிக்கை! புகைப்படம் வைரல்


உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர்செலென்ஸ்கி, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக இணைப்பதற்கான கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்யா தொடர்ந்து ஐந்தாவது நாளாக உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் நிலையில்,இன்று மாலை இரு நாடுகளும் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தின.

இதனிடையே, உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முறைப்படி கோரிக்கை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி கையெழுத்திடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வோலோடிமிர் செலென்ஸ்கி, “எங்கள் இலக்கு அனைத்து ஐரோப்பியர்களுடனும் ஒன்றாக இருக்க வேண்டும், மிக முக்கியமாக, சமமான நிலையில் இருக்க வேண்டும். இது நியாயமானது என்று நான் நம்புகிறேன். அது சாத்தியம் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

மாஸ்கோவின் தாக்குதலின் முதல் நான்கு நாட்களில் 16 குழந்தைகள் இறந்ததாகவும் மேலும் 45 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் Michelle Bachelet திங்களன்று, ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 102 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார், ஆனால் உண்மையான எண்ணிக்கை ஒருவேளை மிக அதிகமாக இருக்கும் என்று எச்சரித்தார்.

“உக்ரேனியர்கள் நாம் யார் என்பதை உலகுக்குக் காட்டியுள்ளனர். ரஷ்யா அது என்ன ஆனது என்பதைக் காட்டியுள்ளது” என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

[


]



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.