போங்க.. போய் ரஷ்யாவுடன் சண்டை போடுங்க.. கைதிகளை திறந்து விட்ட உக்ரைன்!

ரஷ்யப் படையினருடன் சண்டையிட விரும்பும் கைதிகளை விடுதலை செய்து வருகிறது
உக்ரைன்
.

ரஷ்யப் படையினரின் தாக்குதலை விதம் விதமாக சமாளித்துக் கொண்டிருக்கிறது உக்ரைன். அந்த நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆயுத உதவிகளைச் செய்து வருகின்றன. பொருளாதார ரீதியாக ரஷ்யாவை பலவீனப்படுத்தும் வகையில் பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ரஷ்யப் படையினருக்கு எதிராக கைதிகளையும் போரில் ஈடுபடுத்த ஆரம்பித்துள்ளது உக்ரைன். ராணுவத்தினரின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் கைதிகளை கையில் எடுத்துள்ளது உக்ரைன். அதன்படி ரஷ்யப் படையினருடன் மோதும் வகையில் பலமாக உள்ள, விருப்பம் தெரிவிக்கும் கைதிகள், குற்றப் பின்னணி கொண்டோரை அது சிறையிலிருந்து விடுவித்து போர்முனைக்கு அனுப்பி வருகிறது.

இந்த கைதிகளை ரஷ்யப் படையினர் தற்போது நிலை கொண்டு டான்பாஸ் என அழைக்கப்படும் டோனட்ஸ்க், லுகன்ஸ்க் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வருகிறது உக்ரைன் ராணுவம். இந்த இரண்டு பகுதிகளும் கடந்த 2014ல் நடந்த கீவ் புரட்சிக்குப் பிறகு தனித்து வெளியேறி தனிக் குடியரசுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த இரு பகுதிகளையும் தற்போது ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன.

இந்தப் பகுதியில்தான் ரஷ்யப் படையினரை எதிர்த்து மோத கைதிகளை அனுப்பியுள்ளது உக்ரைன். போரிடும் அனுபவம் உடைய, ஏற்கனவே படைகளில் இருந்த, போர்க்குணம் மிக்க கைதிகளை தேர்வு செய்து ஆயுதங்களைக் கொடுத்து அனுப்பி வருகிறது உக்ரைன் ராணுவம். இது சிக்கலானதுதான், ஆனாலும் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக அரசின் அட்டர்னி ஜெனரல் ஆண்டிரி சினியுக் கூறியுள்ளார்.

உலகில் எந்தப் போர் நடந்தாலும்.. முக்கியக் காரணமான மூலப் புள்ளி.. “அமெரிக்கா”!

செர்ஜி டார்பின் என்ற கைதி குறித்து சினியுக் கூறுகையில், டார்பின் ஏற்கனவே டோனட்ஸ்க் போரில் ஈடுபட்ட அனுபவம் உடையவர். ஒரு கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ஆறு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 2018 முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். போர் அனுபவம் உடையவர் என்பதால் அவர் போர் முனைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றார்.

அதேபோல பஸ் ஸ்டாப்பில் ஒருவருடன் நடந்த மோதலில் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு சிறைக்குப் போன டிமிட்ரி பாலபுகா என்பவரும் போர்முனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதேபோல பொதுமக்களுக்கும் ஆயுதங்களைக் கொடுத்து வருகிறது உக்ரைன் அரசு. போரில் ஈடுபடக் கூறி வருகிறது. இதனால் பொதுமக்களும் கூட ரஷ்யப் படையினரை எதிர்த்துப் போரிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.