கருப்பு உடையில் கண்ணம்மாவின் அசத்தல் போட்டோஸ்

விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' தொடரில் கண்ணம்மாவாக நடித்து பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன். தனிப்பட்ட காரணங்களுக்காக சமீபத்தில் 'பாரதி கண்ணம்மா' தொடரை விட்டு வெளியேறினார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரோஷினி ஹரிப்பிரியன் அவ்வப்போது போட்டோஷூட்களை வெளியிட்டு கவனம் ஈர்த்து வந்தார். இந்நிலையில், கருப்பு நிற ஆடையில் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் சில புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

'பாரதி கண்ணம்மா' தொடரில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் இவர் தவறவிட்ட பொன்னான பட வாய்ப்புகளில் ஒன்று 'ஜெய் பீம்' படத்தின் ஹீரோயின் வாய்ப்பு. இதனால் அப்செட்டாக இருந்த ரோஷினி விட்டதை பிடிக்க விடா முயற்சி செய்து வருகிறார். விஜய் டிவியிலிருந்து பல ஸ்டார்களை சினிமாவுக்கு அனுப்பிய மக்கள் ஷோவான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.