மஹா சிவராத்திரி கொண்டாட்டம்.! <!– மஹா சிவராத்திரி கொண்டாட்டம்.! –>

நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா சிவபக்தர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் பெருங்கூட்டமாக பக்தர்கள் சிவாலயங்களில் திரண்டு வழிபாடு செய்தனர்.

உலகம் முழுவதுமுள்ள இந்துக்களால் மஹா சிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மஹாராஷ்டிர மாநிலம் திரிம்பாக் நகரிலுள்ள திரிம்பகேஸ்வரர் கோயில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மஹா சிவராத்திரிக்காக பக்தர்கள் திரண்டு வந்து சிவனை வழிபட்டனர்.

ஒடிஷா – புவனேஷ்வரில் உள்ள லிங்கராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஹா சிவராத்திரி தரிசனம் மேற்கொண்டனர்.
உத்திரகண்ட் மாநிலம் கத்திமா நகரிலுள்ள பங்கண்டி கோவிலில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்று தரிசனம் செய்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரிலுள்ள சங்கராச்சார்யா கோவிலில் மஹா சிவராத்திரி விழா களைகட்டியது.

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள சிஹாரி சிவாலயத்தில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வழிபாடு செய்தார்.

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கங்கை ஆற்றில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலையில் பக்தர்கள் புனித நீராடினர்.

உத்ரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்திலுள்ள பத்ரிநாராயணா கோவில் முன்பு இந்தோ – திபெத்திய எல்லைப் படை காவலர்கள் “பாரத் மாதாகி ஜெய்” என முழக்கம் எழுப்பி வழிபாடு செய்தனர்.

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள கோரக்நாத் கோவிலில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழிபாடு செய்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரீசி மாவட்டத்திலுள்ள சம்பு மஹாதேவ் கோவிலில் பக்தர்கள் மஹாசிவராத்திரி வழிபாடு செய்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினியிலுள்ள மஹாகாளீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி கொண்டாட்டம் களை கட்டியது…

தலைநகர் டெல்லி ஆஷ்ரம் சௌக் பகுதியிலுள்ள சிவாலயம் ஒன்றில் மஹாசிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.