5.6 ரிக்டர் அளவில், இந்தோனேஷியாவை உலுக்கிய நிலநடுக்கம் – 252 பேர் உயிரிழப்பு..!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை உலுக்கிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுமார் ஏழாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், இடிபாடுகளில் சிக்கி, 377 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்த நிலையில், மேலும் 31 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

தென்னாப்பிரிக்காவில் 10 சதவீதம் ஊதிய உயர்வு கோரி அரசாங்க கருவூலத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள்..!

தென் ஆப்ரிக்காவில், ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் அரசாங்க கருவூலத்தை முற்றுகையிட்டனர். விலைவாசி உயர்வை காரணம் காட்டி, பத்து சதவீத ஊதிய உயர்வு வழங்குமாறு, அரசு ஊழியர்கள் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டின் மொத்த வருவாயில், மூன்றில் ஒரு பங்கு அரசு ஊழியர்களுக்கு செலவிடப்படுவதாக தெரிவித்த தென் ஆப்ரிக்க அரசு 3 சதவீத ஊதிய உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்தது. அதனை ஏற்க மறுத்து அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். … Read more

உலகக்கோப்பையில் வெற்றி பெற வேண்டி மெக்சிகோவில் குழந்தை ஏசு சிலைக்கு கால்பந்து அணி ஜெர்சியை அணிவித்த ரசிகர்கள்..!

மெக்சிகோவில் குழந்தை ஏசு சிலைக்கு, அந்நாட்டு கால்பந்து அணியின் ஜெர்சியை அணிவித்து, ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். டகுபா என்ற நகருக்கு அருகேயுள்ள சான் மிகுவல் ஆர்கேஞ்சல் என்ற தேவாலயத்தில், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தங்கள் அணி வெற்றிப்பெற வேண்டி பலர் பிரார்த்தனை செய்தனர். 1970ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரின்போதும், அங்கு கால்பந்து ரசிகர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்வது வழக்கம் என கூறப்படுகிறது. Source link

அல்பேனியாவின் வடக்குப்பகுதியில் கனமழை காரணமாக கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன..!

ஷ்கோத்ரா நகரில் லீட் மசூதி வெள்ளநீரால் சூழப்பட்டுள்ள நிலையில், அதன் அருகிலிருந்த பாலமும், புனா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இடிந்தது. அல்பேனியாவின் வடக்குப்பகுதியில் கனமழை காரணமாக, கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து, மக்களை மீட்புக்குழுவினர் வெளியேற்றி வருகின்றனர். அல்பேனியா, நீர்மின் உற்பத்தியை மட்டுமே நம்பியுள்ளதால், அதற்காக இரண்டு அணைகளில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. 24 மணி நேரம் பெய்த தொடர் மழையால், அணையில் இருந்து நீரை வெளியேற்றியதால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக, தகவல்கள் … Read more

சிவன் கோவில்களில் கார்த்திகை மாத பிரதோஷ பூஜையில் சுவாமி தரிசனம் செய்ய கலந்து கொண்ட திரளான பக்தர்கள்..!

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை மாத பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்திற்கு உட்பட்ட கமலாலய திருக்குளத்தின் நடுவே அமைந்துள்ள ஸ்ரீ யோகாம்பாள் சமேத நாகநாதசுவாமி ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவார ப்ரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். … Read more

சிபிஐ அதிகாரி என போலி அடையாள அட்டை வைத்திருந்த நபர் கைது..!

திருப்பூரில் சிபிஐ அதிகாரி என போலி அடையாள அட்டை வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். பவானி நகரில் வசித்து வரும் கட்டிட மேஸ்திரியான ராசையா என்பவர்  மத்திய குற்ற புலனாய்வு துறை என்ற  அடையாள அட்டை வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில்  அங்கு சென்ற திருப்பூர் வடக்கு குற்ற பிரிவு போலீசார் ராசையாவை பிடித்து விசாரித்த போது,  போலியான அடையாள அட்டை வைத்திருந்ததும், மேலும் 2 நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு … Read more

5 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலைகொண்டுள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா … Read more

மது போதையில் கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி மின்சார கம்பியை தொட்ட இளைஞர் படுகாயம்..!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், மது போதையில் கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி மின்சார கம்பியை தொட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தர்மத்துப்பட்டியை சேர்ந்த வேலு, இன்று அதிகாலை, பேருந்து நிலையத்தில் உள்ள காவல்துறையின் கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி மது போதையில் ரகளையில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இளைஞரை கீழே இறங்க அறிவுறுத்தியும் கேட்காத அவர், அங்கிருந்த மின்கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக இளைஞரை … Read more

அரிட்டாபட்டியில் உள்ள மலைகள், நீர் நிலைகள், அரிய பறவை இனங்களை காப்பாற்ற பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவித்து தமிழக அரசு..!

மதுரையிலுள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைகள், நீர் நிலைகள், அரிய பறவை இனங்களை காப்பாற்ற, பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரிட்டாபட்டி கிராமத்தைச் சுற்றி ஏழு பாறை மலைகள், குடைவரை கோவில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய சமணர் படுகைகள் உள்ளிட்டவை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த மலைகளை சுற்றி வற்றாத நீரூற்றுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட நீர் நிலைகளும், மீன் இனங்களும், பூச்சி இனங்களும், 300-க்கும் மேற்பட்ட அரிய பறவைகள் மற்றும் … Read more

உக்ரைனில், ஆட்சியை மாற்றுவது தங்கள் நோக்கம் இல்லை – ரஷ்யா திட்டவட்டம்..!

உக்ரைனில், ஆட்சியை மாற்றுவது தங்கள் நோக்கம் அல்ல என ரஷ்யா தெரிவித்துள்ளது.  உக்ரைனில் உருவான ரஷ்யாவிற்கெதிரான மனநிலையை எதிர்க்கவே போர் தொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உக்ரைனின் மின்கட்டமைப்புகளை ரஷ்யா தொடர்ந்து தாக்கிவருவதால் குளிர்காலத்தில் ஒரு கோடி பேர் மின்சாரமின்றி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹீட்டர்களை பயன்படுத்தமுடியாமல் பலர் குளிரில் உயிரிழக்கக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. Source link