டிவி மார்க்கெட்டில் கால்பதிக்கும் Asus நிறுவனம் – மார்ச் 3 புதிய OLED டிவிக்கள் அறிமுகம்!

தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஆசஸ் நிறுவனம், ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இச்சூழலில், நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது முதல் OLED டிவிக்களை அறிமுகம் செய்கிறது.

மார்ச் 3ஆம் தேதி இந்த டிவி வெளியீட்டு நிகழ்வு இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. #WhoWatchesTV #WowTheWorld போன்ற ஹேஷ்டேக்குகளைக் கொண்டு ஆசஸ் நிறுவனம் தனது புது படைப்புகளை விளம்பரப்படுத்தி வருகிறது.

மக்கள் சிஆர்டி தொலைக்காட்சி பெட்டிகளில் இருந்து LCD டிவிக்களுக்கு மேம்படுத்திக் கொண்டனர். வெகு சில காலங்களில் LED டிவிக்கள் அபரிவிதமான வளர்ச்சியைக் கண்டது. டிவி சந்தையில் சாம்சங், எல்ஜி, சோனி, பானாசோனிக் என பெரு நிறுவனங்கள் கோலோச்சி இருந்த காலத்தில், ஸ்மார்ட் டிவிக்களின் தேடலை மக்கள் தொடங்கினர்.

அதன் விளைவாக, சீனா நிறுவனமான சியோமி ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் டிவிக்களை மலிவு விலையில் சந்தைக்கு கொண்டுவந்தது. இதனைத் தொடர்ந்து LED டிவிக்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும், தங்கள் டிவிக்களின் விலையை கணிசமாகக் குறைத்தது.

தொடர்ச்சியாக ஸ்மார்ட் எல்இடி டிவிக்களின் மீது மக்களுக்கு அதிக மோகம் ஏற்பட்டது. அதில் இந்திய நிறுவனமான வியூ, சீன நிறுவனமான சியோமி, மோட்டோரோலா, நோக்கியா என பெரும்பாலான அனைத்து டெக் நிறுவனங்களும் டிவி தயாரிப்பில் இறங்கி சந்தையில் கணிசமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

150Mbps broadband plans: 3.5TB வரை டேட்டா… OTT தளங்களின் சந்தாவும் இலவசம்!

இந்த சூழலைப் பயன்படுத்த தற்போது ஆசஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தங்களின் மடிக்கணினிகளில் திறன் வாய்ந்த OLED பேனல்களை பயன்படுத்தி வரும் நிறுவனம், தற்போது OLED டிவிக்களை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. உங்கள் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட குவாலிட்டி எல் இ டி டிவிக்களை அறிமுகம் செய்ய உள்ளோம் என ஆசஸ் இந்தியா விளம்பரப்படுத்தி வருகிறது. இந்த டிவிக்கள் பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம் வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.

சந்தையில் உள்ள பிற ஆண்ட்ராய்டு டிவிக்களை போன்றே, ஆசஸ் OLED டிவிக்களில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற செயலிகள் பிரீ லோடடாக வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் இடம்பிடிக்க ஆசஸ் நிறுவனம் பிற பிராண்டுகளின் டிவிக்களை விட, தங்களின் டிவிக்களுக்கு விலை குறைவாகவே நிர்ணயம் செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

airtel xstream: ஏர்டெல் போட்ட புது ஸ்கெட்ச்… 15 ஓடிடி தளங்கள் ஒரே சந்தா திட்டத்தில்!

சமீபத்தில் நிறுவனம் ஆசஸ் ரோஜ் போன் 5எஸ், ஆசஸ் 8 இசட் ஆகிய இரு பவர்புல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட சில நாள்களிலே, ஆசஸ் நிறுவனம் தனது டிவிக்களை அறிமுகம் செய்வது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்து உள்ளது.

ஆசஸ் ரோஜ் போன் 5எஸ் சிறப்பம்சங்கள் (Asus ROG Phone 5S Specifications)

சிறந்த சாம்சங் டிஸ்ப்ளே, இரண்டு பேட்டரிகள், இரண்டு டைப்-சி சார்ஜிங் போர்ட்டுகள், 8K வரை வீடியோ எடுக்கும் திறன் கொண்ட கேமரா, அதி திறன் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 5ஜி சிப்செட் ஆகியவை இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.

Asus Rog Phone 5S: இதுவரை எந்த போனிலும் இல்லாத அம்சம்… அதென்ன தெரியுமா!

ஆசஸ் 8 இசட் சிறப்பம்சங்கள் (Asus 8z specifications)

ஆசஸ் 8 இசட் ஸ்மார்ட்போனில் பிளாக்‌ஷிப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பாஸ்ட் போக்கஸ் கொண்ட சோனி கேமராக்கள் ஆகிய சிறப்பம்சங்கள் அடங்கி உள்ளது.

Asus வெளியிட்ட கைக்கு அடக்கமான போன்… ஆனா பவர்ல இத அடிச்சுக்க முடியாது!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.