சென்னை திமுக மேயர் பிரியா: 21 மாநகராட்சி மேயர்- துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நேற்று கவுன்சிலர்களாகப் பதவியேற்றுக்கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில், சென்னை, மதுரை , கோவை உள்ளிட்ட 20 மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவிகளுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கும்பக்கோணம் மாநகராட்சி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

அதன்படி, சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக வேட்பாளராக பிரியா ராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். 340 வருட சென்னை மாநகராட்சி வரலாற்றில் இளம் வயது மாநகராட்சி வேட்பாளராக பிரியா களமிறங்குவது குறிப்பிடத்தக்கது. துணை மேயர் பதவிக்கு திமுக சார்பில் மகேஷ் குமார் போட்டியிடுகிறார்.

மாநகராட்சி மேயர் துணை மேயர்
சென்னை பிரியா ராஜன் மு.மகேஷ் குமார்
மதுரை இந்திராணி
திருச்சி மு. அன்பழகன் திவ்யா தனக்கோடி
திருநெல்வேலி பி.எம்.சரவணன் கே.ஆர்.ராஜூ
கோவை கல்பனா வெற்றிச்செல்வன்
சேலம் ஏ. ராமசந்திரன்
திருப்பூர் என்.தினேஷ் குமார்
ஈரோடு நாகரத்தினம் செல்வராஜ்
தூத்துக்குடி என்.பி.ஜெகன் ஜெனிட்டா செல்வராஜ்
ஆவடி ஜி.உதயகுமார்
தாம்பரம் வசந்தகுமாரி கமலகண்ணன் ஜி.காமராஜ்
காஞ்சிபுரம் மகாலட்சுமி யுவராஜ்
வேலூர் சுஜாதா சுனில்
கடலூர் சுந்தரி
தஞ்சாவூர் சண்.ராமநாதன் அஞ்சுகம் பூபதி
கும்பகோணம் தமிழழகன்
கரூர் கவிதா தாரணி பி.சரவணன்
ஓசூர் எஸ்.ஏ.சத்யா சி.ஆனந்தைய்யா
திண்டுக்கல் இளமதி ராஜப்பா
சிவகாசி சங்கீதா விக்னேஷ் பிரியா
நாகர்கோவில் மகேஷ் மேரி பிரின்சி

இந்நிலையில், நாளை (மார்ச் 4) 21 மேயர், துணை மேயர், 138 நகராட்சி தலைவர், துணைத் தலைவர், 489 பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் என, மொத்தம் 1,296 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ளது. இப்பதவிகளில் சிலவற்றை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.

அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், இரு துணை மேயர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு மாநகராட்சி துணை மேயர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் திமுக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.