பார்லி., வன்முறை வழக்கு நீதிபதிகள் தேர்வு| Dinamalar

வாஷிங்டன்:அமெரிக்க பார்லி.,யில் நடந்த வன்முறை வழக்கை விசாரிக்க, 12 நீதிபதிகள் அடங்கிய குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில், 2020ல் நடந்த அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள், ஜோ பைடன் புதிய அதிபராக பதவியேற்பதற்கு சில தினங்களுக்கு முன், ‘கேப்பிடோல்’ எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்திற்குள் நுழைந்து பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர்.

அப்போது, கை வெஸ்லி ரெப்பிட் என்ற டிரம்ப் ஆதரவாளர், துப்பாக்கியுடன் பார்லி., வளாகத்திற்குள் நுழைந்து, போலீஸ் அதிகாரிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டார். வன்முறைகளில் ஈடுபட்டவர்களில், அவர் முக்கிய நபராக கருதப்படுகிறார்.இந்நிலையில், இந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதிகள் குழு, நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, 12 நீதிபதிகள் மற்றும் நான்கு மாற்று நீதிபதிகளை தேர்வு செய்து, அமெரிக்க மாவட்ட நீதிபதி தாப்னே பிரெட்ரிச் அறிவித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.