ஆஸ்திரேலியாவின் சுழல் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் மறைவு

தாய்லாந்து

ஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் (வயது 52) மாரடைப்பால் மறைந்தார்.

உலகப்புகழ் பெற்ற பிரபல ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். 1992ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காகச் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார்.   ஷேன் வார்ன், 145 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 708 விக்கெட்டுகளையும், 194 ஒருநாள் போட்டிகளில் ஆடி 293 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரனுக்கு (800) அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் (708) ஆவார்.  மேலும்  ரிஸ்ட் ஸ்பின்னரான ஷேன் வார்ன், அவர் ஆடிய காலத்தில் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஜெயசூரியா, அசாருதீன், ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ் உள்ளிட்ட பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் கதி கலங்க வைத்துள்ளார்..

ஷேர்ன் வார்ன் சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கியவர் ஆவார்.  இவர்  கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், வர்ணனையாளராக இருந்து வந்தார்.  தற்போது 52 வயதாகும் ஷேர்ன் வார்ன் தாய்லாந்தில் இன்று திடீர் என் மாரடைப்பால் காலமானார்.  இந்த செய்தி விளையாட்டு உலகில் கடும் சோதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.