Flipkart Offer – மலிவு விலையில் Apple iPhone வாங்க நல்ல வாய்ப்பு!

Flipkart ஷாப்பிங் தளம் மொபைல்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது 5ஜி போன்களை, பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இருந்து மலிவு விலைக்கு பயனர்கள் வாங்க முடியும். தற்போது ஐபோன் மீது அதிரடி சலுகைகளை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

புதிய சலுகையாக ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 5ஜி போன் வெறும் ரூ.32,699க்கு விற்கப்படுகிறது. சலுகைகள், தள்ளுபடிகள் அனைத்தையும் பயன்படுத்தினால், இந்த விலைக்கு 5ஜி போனை வாங்கலாம். சலுகை விலையில் Apple iPhone 12 Mini ஸ்மார்ட்போனை எப்படி வாங்குவது என தெரிந்து கொள்ளுங்கள்.

32699 ரூபாய்க்கு ஆப்பிள் 5ஜி போன்

ஆப்பிள் ஐபோன் 12 மினி
5ஜி ஸ்மார்ட்போனின் விலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.59,900 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. சீசன் நேரடி தள்ளுபடியாக ரூ.9,901 வழங்கப்படுகிறது. மேலும், பயனர்கள் Flipkart Axis Bank Credit Card கொண்டு இந்த போனை ஆர்டர் செய்யும்போது கூடுதலாக 5% விழுக்காடு தள்ளுபடி கிடைக்கும். அதாவது ரூ.2500 போனின் விலையில் இருந்து குறைக்கப்படும். இப்போது போனின் விலை ரூ.47,499 ஆக இருக்கும்.

பாதுகாப்பாக இணையத்தில் உலாவ சிறந்த VPN-கள்?

பிளிப்கார்ட் பழைய போன்களுக்கு சிறந்த எக்ஸ்சேஞ்ச் விலையைத் தருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கும் சிறந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை வழங்குகிறது. அதன்படி, பயனர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை Exchange செய்ய விரும்பினால், பிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் மூலம் ரூ.14,800 வரை பெறலாம். உங்கள் போனின் நிலையை பொறுத்தே Exchange Value நிர்ணையிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Apple Event 2022: iPhone SE 3, M2 சிப்கள் அறிமுகமாவதாகத் தகவல் – நேரலையில் காண வாய்ப்பு!

போனில் தள்ளுபடி விலையான ரூ.47,499இல், உங்கள் பழைய போனுக்கு கிடைத்த எக்ஸ்சேஞ்ச் விலையை கழித்தால் ரூ.32,699 வரும். எனவே, உங்களின் பழைய போனுக்கு நல்ல வேல்யூ கிடைத்தால், புதிய ஆப்பிள் ஐபோன் 12 மினி 5ஜி போனை வெறும் ரூ.4199க்கு வாங்க முடியும்.

ஆப்பிள் ஐபோன் 12 மினி 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

இந்த போனில் 5.4 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே உள்ளது. இந்த 5G ஸ்மார்ட்போன் A14 பயோனிக் சிப் உதவியுடன் இயங்குகிறது. கைக்கு மிகவும் அடக்கமாக இருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார் OIS வசதியுடன் வருகிறது. இதனுடன் மேலும் ஒரு 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்பக்கம் 12 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Flipkart Sale: மக்களே; வெறும் ரூ.4,199க்கு சாம்சங் 5ஜி போன் – இந்த வாய்ப்ப நழுவ விட்றாதீங்க!

அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப் ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. வைஃபை (5GHz), ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த ஆப்பிள் ஐபோன் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.