மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி

நியுசிலாந்தில் இடம்பெற்று வரும் மகளிர் உலகக் கிண்ண ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இன்று(06)  இடம்பெற்ற நான்காவது போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை வெற்றி கொண்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 43 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

அதன்படி இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி 107 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.