வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை: இந்த வருடத்தில் இது 9-வது முறை

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரிய புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனை தென் கொரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தென்கொரியா அரசு தரப்பில், “ வடகொரியா சனிக்கிழமை கடலுக்கு அடியில் ஏவுகணை சோதனை நடத்தியது. தலைநகரிலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சோதனையை வடகொரியா நடத்தி இருக்கிறது. எதற்காக இந்த சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது என்பது பற்றிய விவரம் இதுவரை தெரியவில்லை ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஏவுகணை பரிசோதனை குறித்த தகவல் இல்லை.

முன்னதாக, வானில் இருக்கும்போதே இலக்குகளை தேர்ந்தெடுத்து அழிக்கும் வகையிலான டேக்டிகள் கைடட் ( tactical guided) என்ற ஏவுகணையை வடகொரியா ஜனவரி மாதம் பரிசோதித்தது.

2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா இதுவரை 9 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது என்று ஐ.நா. கடந்த ஆண்டு கண்டித்திருந்தது. இந்த நிலையில், வடகொரியா இந்தச் சோதனையை நடத்தியுள்ளது.

தனது பாதுகாப்புக்காக ராணுவ பலத்தை அதிகரிக்கவே இந்த ஏவுகணை சோதனைகளை செய்வதாக வடகொரியா தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இதனை ஐ. நா. சபை ஏற்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.