1,400 கி.மீ. பைக்கில் தனியாக சென்று மகனை மீட்ட தாய்க்கு மீண்டும் சிக்கல்: உக்ரைனில் படிப்பவரை மீட்க வேண்டுகோள்

தெலங்கானா மாநிலம் நிசாமா பாத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ரஸியா. இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். கடந்த 2020-ம்ஆண்டு இவருடைய மகன் நிசாமுதீன் அமன், கரோனா ஊரடங்கின் போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கிக் கொண்டார்.

போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டதால் மகனை மீட்க தனியாக பைக்கில் புறப்பட்டார். நிசாமாபாத்தில் இருந்து நெல்லூர் சென்று மகனை மீட்டு வந்தார். சுமார் 1,400 கி.மீ. தூரம் பைக்கில் சென்று மகனை மீட்ட ரஸியா ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டார்.

இந்நிலையில், அவருடைய 19 வயது மகன் நிசாமுதீன் அமன் தற்போது உக்ரைனில் வடகிழக்குப் பகுதியில் உள்ள சுமி நகரில் முதலாண்டு மருத்துவம் படித்து வருகிறார். தற்போது வெளிநாட்டில் சிக்கியவரை மீட்க வழி தெரியாமல் தவிக்கிறார்.

இந்நிலையில், மகனை மீட்டுஅழைத்து வர உதவி கோரி தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், உள்துறை அமைச்சர் முகமது மம்மூத் அலி, மாநிலஉயரதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ரஸியா கூறும்போது, ‘‘உக்ரைனின் சுமி நகரில்சிக்கிய மாணவர்கள் வெளியில்வருவதற்கு அஞ்சுகின்றனர். மகன்உட்பட அங்கிருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு இந்தியாஅழைத்து வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.