உ.பி-யில் குறைந்த மெஜாரிட்டியில் பா. ஜ.க; பஞ்சாப்-ல் ஆம் ஆத்மி ஆட்சி: Exit Poll ரிசல்ட்

Elections Exit Poll Results 2022: BJP to retain UP with reduced majority; AAP to unseat Congress in Punjab: உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் திங்கள்கிழமை முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உத்தரப் பிரதேசத்தில் குறைந்த பெரும்பான்மையுடன் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தெளிவான வெற்றியைக் கணித்துள்ளன.

இந்த முறை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்திய பெரும்பாலான ஏஜென்சிகளின் முடிவுகளின்படி, பஞ்சாபில் காங்கிரஸை அகற்றி ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் உத்தரகண்ட் மற்றும் கோவாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி இருக்கும். மணிப்பூரில் காங்கிரஸை விட பாஜக முன்னிலை பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்: உக்ரைன் குறித்து ஜெலன்ஸ்கியுடன் விவாதித்த மோடி – 35 நிமிட உரையாடலில் பேசியது என்ன?

உத்தரப் பிரதேசத்தில் 2017-ம் ஆண்டு பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், இந்தத் தேர்தல் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் மீதான மக்களின் முடிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப்பை பொறுத்தவரை ஆளும் காங்கிரஸிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற ஆம் ஆத்மி கட்சி முனைப்பு கட்டுவதோடு, பஞ்சாப் இந்த முறை பலமுனைத் தேர்தலைக் கண்டது.

இந்தியா டுடே-ஆக்சிஸ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி 76-90 இடங்களில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெறும். காங்கிரஸ் 19-31 இடங்களையும், பாஜக 1-4 இடங்களையும், எஸ்ஏடி 7-11 இடங்களையும் கைப்பற்றும். பஞ்சாபில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 59.

நியூஸ்எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி 56-61 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் 24-29 இடங்களையும், பாஜக 1-6 இடங்களையும், எஸ்ஏடி 22-26 இடங்களையும் கைப்பற்றும்.

பஞ்சாபில், இந்தியா டுடே ஆக்சிஸ்-கணிப்பின்படி, 117 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் ஆம் ஆத்மிக்கு 76-90 இடங்களும், காங்கிரஸுக்கு 19-31 இடங்களும், பாஜகவுக்கு 1-4 இடங்களும், எஸ்ஏடிக்கு 7-11 இடங்களும் கிடைக்கும்.

நியூஸ்எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, உத்தரகாண்டில் காங்கிரஸ் 33-35 இடங்களையும், பாஜக 31-33 இடங்களையும் கைப்பற்றும். ஆம் ஆத்மி கட்சி 0 முதல் 3 இடங்களில் வெற்றி பெறும்.

உத்தரகாண்டில் பாஜக 37 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ்-வீட்டோ தெரிவித்துள்ளது.

மேட்ரைஸ் கருத்துக்கணிப்பின்படி, உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 262-277 இடங்களைப் பெறும். SP மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 140 வெற்றி பெறும், BSP 17 இடங்களைப் பெறும். உ.பி.யில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 202 ஆகும்.

போல்ஸ்ட்ராட் கருத்துக்கணிப்பின்படி, உ.பி.யில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 211-225 இடங்களைப் பெறும், எஸ்பி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 146-160, பிஎஸ்பி 14-24 மற்றும் காங்கிரஸ் 4-6 இடங்களைப் பெறும்.

இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 288-326 இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளது.

கோவாவில் காங்கிரசுக்கு 16 இடங்களும், பாஜகவுக்கு 14 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 4 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 6 இடங்களும் என டைம் நவ்வின் கணிப்பு காட்டுகிறது. மொத்தம் 40 சட்டமன்ற இடங்களைக் கொண்ட கோவாவில் பெரும்பான்மைக்கு 20 இடங்கள் தேவை.

Zee News-DESIGNBOXED இன் கருத்துக் கணிப்புகளின்படி, பாஜக மணிப்பூரை 32-38 இடங்களுடன் தக்க வைத்துக் கொள்ளும், அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் இடங்கள் 12-17 இடையே மாறுபடும்.

நியூஸ் 18 பஞ்சாப் பி-மார்க் கருத்துக்கணிப்பு மணிப்பூரில் பாஜகவுக்கு 27-31 இடங்களும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 11-17 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது.

இந்தியா நியூஸ் கருத்துக்கணிப்பு மணிப்பூரில் பாஜகவுக்கு 23-28 இடங்களும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 10-14 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.