யப் டிவி வாயிலாக 190 நாடுகளில் டிடி இந்தியா| Dinamalar

புது டில்லி: மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சக அறிக்கை: மத்திய அரசின் பிரசார் பார்தி நிறுவனம் ‘டிடி இந்தியா’ எனப்படும் துார்தர்ஷன் இந்தியா சேனல் வாயிலாக இந்திய கலாசாரம், பண்பாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இந்நிகழ்ச்சிகளை உலகளவில் பரப்ப பிரசார் பார்தி, யப் டிவியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

துார்தர்ஷன் நிகழ்ச்சிகளை யப் டிவி வாயிலாக அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட 190 நாடுகளில் காணலாம், என அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.