நாட்டு மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு.!

நாட்டு இன மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வெளிநாட்டு கலப்பின மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என்றும், நாட்டு மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சான்று அளித்த பிறகே அவற்றை ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் தரப்பில் சென்னை உச்சநீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மேல்முறையீட்டு மனுவில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் தமிழ் நாட்டு மாடுகளை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று மட்டுமே கோரி இருந்ததாகவும், இது போன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலப்பினம் மற்றும் வெளிநாட்டு இன மாடுகள் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா தமிழக மற்றும் பிற மாநில காளைகளின் இனச்சேர்க்கையில் செயற்கை கருவூட்டல் கடைபிடிப்பது குறித்து அவர் தன்னுடைய மனுவில் எதுவும் குறிப்பிடவில்லை என்றும், அது தொடர்பாக எதிர் மனுதாரர் தரப்பில் வாதமும் வைக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆய்வுகள், ஆவணங்கள், புள்ளி விவரங்கள் ஆகியவற்றை உயர்நீதிமன்றம் பரிசீலனை செய்யாமல், செயற்கை கருவூட்டலை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது என்றும், இது விலங்குகளின் இனச்சேர்க்கை உரிமையை மறுப்பதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் எதிர்மனுதாரரின் கோரிக்கையை நீதி மன்றம் முடிவு செய்ய முடியாது என்றும், விலங்குகளில் இன சேர்க்கையானது இனவிருத்திக்காக செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செயற்கை கருவூட்டல் என்பது இனச்சேர்க்கையில் இருந்து காளைகளை தடுப்பதில்லை ஆனால் காளைகள் பயன்படுத்தப்படுவதை வரையறை செய்கிறது என்றும், விலங்குகளில் இனச்சேர்க்கை உரிமைகளை அல்லது இயற்கையான இனச்சேர்க்கையை மறுப்பதற்கோ இல்லை என்றும் தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேலும் இந்த நடைமுறையானது எந்த ஒரு விலங்குகளின் உரிமைகளையும் மீறுவதாக இல்லை என்றும், தமிழகத்தில் கால்நடைகளின் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், பால் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு இலவச கால்நடை விநியோகத் திட்டத்தை செயல்படுத்து வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உரிய வகையில் பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.