பஞ்சாப் நேஷனல் வங்கி உயர் அதிகாரி கைது.. ரூ.400 கோடி கடன் மோசடியில் தொடர்பு..!

காசியாபாத்: பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிரெட்டர் நொய்டா கிளையின் தலைமை மேலாளர், முதன்மை குற்றவாளியான லக்ஷய் தன்வாருடன் இணைந்து 400 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுப்பட்டதாக காசியாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடன் மோசடி குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), கிரேட்டர் நொய்டாவில் உள்ள வங்கியின் மேலாளர் உட்கர்ஷ் குமாரை கைது செய்துள்ளதாக, அந்நகர காவல் கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குமார் பஞ்சாப் வங்கியில் சந்திரா நகர் கிளையில் ஊழல் நடந்த போது பணி புரிந்தது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்கி விதிகள் மாற்றம்.. ஏப்ரல் 4 முதல் அமல்.. கவனமா இருங்கப்பு!

மோசடி மூலம் கடன்

மோசடி மூலம் கடன்

லக்ஷய் தன்வார் பல்வேறு வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து 400 கோடி ரூபாய்க்கு மேலாக வங்கிக் கடன் வாங்கியுள்ளார்.

முன்னதாக வங்கியின் உதவிப் பொது மேலாளர் ராம் நாத் மிஸ்ரா மற்றும் மேலாளர் பிரியதர்ஷினி ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

39 மோசடி வழக்குகள்

39 மோசடி வழக்குகள்

இந்த மோசடி அரங்கேற்றத்தின் பின்னர், தன்வார் மீது 39 மோசடி வழக்குகளும், குமார் மீது மோசடி செய்ததாக 12 வழக்குகளும் உள்ளன என்று எஸ் பி அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சிறப்பு புலனாய்வுக் குழு தன்வாரின் மனைவி பிரியங்கா தன்வார் மற்றும் பல குற்றவாளிகளை தேடி பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஊழியர்கள் கைதாகலாம்
 

முன்னாள் ஊழியர்கள் கைதாகலாம்

மேலும் இந்த மோசடி சம்பவங்களுக்கு உறுதுணையாக இருந்த, முன்னாள் ஊழியர்கள் சிலரும் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறியுள்ளார்.

தன்வார் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் அசையா சொத்துகளை காசியாபாத் நிர்வாகம் முன்னதாக கையகப்படுத்தியது. மேலும் உத்தரபிரதேச குண்டர் சட்டத்தின் கீழ் தன்வார் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அகர்வால் கூறியுள்ளார்.

யார் புகார்?

யார் புகார்?

கடந்த ஆகஸ்ட் 2020ல் தான் இந்த கடன் மோசடி விவகாரம் வெளிச்ச்சத்திற்கு வந்தது. அப்போது சிவம் என்ற நபர், தன்வார் அவரது மனைவி பிரியங்கா, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர் குமார், துணை மேலாளர் பிரியதர்ஷினி மற்றும் பிற ஊழியர்கள் மீதும் புகார் அளித்துள்ளார்.

சொத்துகள் வாங்கு குவிப்பு

சொத்துகள் வாங்கு குவிப்பு

மேலும் தன்வாரின் பெயரில் 1.33 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு சொத்துகள் வாங்கி, அதன் பேரில் வங்கியில் 4 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையில் சிவம் அளித்த புகாரில் நடந்த விசாரணையில், சிவம், அவரது தந்தை சுனில் குமார் தன்வாருடன் மோசடியில் இணைந்து செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. கடனை வசூலிக்க வங்கி நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்தே சிவம் காவல் நிலையத்தில் தங்களை காப்[பாற்றிக் கொள்ள புகாரும் அளித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

PNB bank’s chief manager arrested for collusion in Rs.400 crore loan scam

PNB bank’s chief manager arrested for collusion in Rs.400 crore loan scam/மோசடி மூலம் ரூ.400 கோடி கடன்.. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர் கைது..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.