கோவா தேர்தலில் வெற்றி பெற்று ஜோடியாக சட்டமன்றம் செல்லும் 3 தம்பதிகள்..

கோவா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மூன்று தம்பதியினர், ஜோடியாக சட்டமன்றத்திற்கு செல்கின்றனர்.

40 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படிருக்கும் நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஷ்வஜித் ரானே மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகிய இருவரும் வால்போய் மற்றும் போரியம் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

விஷ்வஜித் 8085 வாக்குகள் வித்தியாசத்திலும், திவ்யா 13,943 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக வேட்பாளர் மான்செரேட் பனாஜி தொகுதியிலும், அவரது மனைவி ஜெனிபர், தலெய்காவ் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் காலன்குட் (Calangute) தொகுதியில் போட்டியிட்ட மைக்கேல் லோபோ வெற்றி பெற்றுள்ளார். அதே கட்சி சார்பில் சியோலிம் (Siolim) தொகுதியில் போட்டியிட்ட அவரது மனைவியும் வெற்றி பெற்றுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஒரு தம்பதியினர் தோல்வியை தழுவினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.