மெளனம் கலைத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மனைவி! வெளியிட்ட முக்கிய உண்மைகள்


உக்ரைன் நாட்டின் முதல் பெண்மணியும், ஜனாதிபதியின் மனைவியுமான Olena Zelenska ரஷ்யப் படையெடுப்பு குறித்து உலக ஊடகங்களுக்கு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ள நிலையில் அதில் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வருகிறது. உலக நாடுகளின் கண்டனங்களையும் பொருட்படுத்தாமல் பல அத்துமீறல் செயல்களை அந்நாட்டு வீரர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச சமூகத்தை நோக்கி உக்ரைன் நாட்டின் முதல் பெண்மணியும், ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மனைவியுமான Olena Zelenska கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நம்ப முடியவில்லை.
கடந்த பிப்ரவரி 24 அன்று, நாங்கள் அனைவரும் ரஷ்ய படையெடுப்பு அறிவிப்பு என்ற அதிர்ச்சி தகவலுடன் தான் கண் விழித்தோம்.

டாங்கிகள் உக்ரேனிய எல்லையைத் தாண்டின, விமானங்கள் எங்கள் வான்வெளியில் நுழைந்தன, ஏவுகணை ஏவுகணைகள் எங்கள் நகரங்களைச் சூழ்ந்தன.
இந்த போர் தாக்குதலில் பல குழந்தைகளின் உயிரிழப்புகள் ஒரு திகிலூட்டும் பேரழிவு நிகழ்வாகும். 

எட்டு வயது ஆலிஸ்… ஓக்திர்காவின் தெருக்களில் இறந்து கிடந்தாள்.
கியேவில் இருந்து பொலினா… தனது பெற்றோருடன் சேர்ந்து வெடிகுண்டு தாக்குதலில் இறந்தார்.
14 வயதான அர்செனியின் கொடூரமாக தாக்கப்பட்டார்,

மேலும் தீவிரமான தீ காரணமாக ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் அவரை அணுக முடியாததால் அவளை காப்பாற்ற முடியவில்லை.
பொதுமக்களுக்கு எதிராக போர் நடத்தவில்லை என ரஷ்யா கூறுகிறது, அதனால் தான் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை கூறுகிறேன்.

இந்த சோர்வுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்களைப் பாருங்கள், அன்புக்குரியவர்களையும் வாழ்க்கையையும் விட்டுச்செல்லும் வலிமிக்க சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் முக்கிய மருத்துவ சிகிச்சை பெறுவதில் மக்கள் சந்திக்கும் சிக்கல்களை அவர் மேற்கோள் காட்டினார்.
அடித்தளத்தில் இன்சுலின் ஊசி போடுவது அவ்வளவு எளிதா அல்லது கடுமையான தீயில் ஆஸ்துமா மருந்துகளைப் பெறுவது அவ்வளவு எளிதா என மக்கள் படும் துன்பங்கள் பற்றி வேதனை தெரிவித்தார்.

புற்றுநோய் நோயாளிகளைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைக்கள் அவர்களுக்கு அத்தியாவசியம் என்ற நிலையில் அது கிடைக்காமல் ஆயிரக்கணக்கானோர் அவதிப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

44 வயதான Olena மற்றும் ஜெலன்ஸ்கி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.