ஸ்டாண்ட்அப் காமெடியன் டு பஞ்சாபின் அடுத்த முதல்வர்! பகவந்த் சிங் மானின் பயணம்!

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனவரி 19ம் தேதி ஆம் ஆத்மி கட்சி அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. போன் மூலம் எடுக்கப்பட்ட சர்வேயில் 2.15 மில்லியன் பேர் பதிலளித்ததாகவும் அதில் 93% அதிகமான வாக்குகள் பகவந்த் சிங் மானுக்கு கிடைத்தது என்று ஆம் ஆத்மி கூறியது.

அவர் தனது கட்சி ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்ற வேட்கையை “உண்மையான பஞ்சாபை மீட்பதற்கான போர்” என்று ஷாஹீத் பகத்சிங் பெயரில் சத்தியம் செய்து, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் ‘பசந்தி’ (மஞ்சள்) தலைப்பாகை அணிந்து கூறினார். அவர் இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று மஞ்சள் தலைப்பாகையை அணிந்துகொண்டு கூட்டத்தை திரட்டுவார். 48 வயதான பகவந்த் சிங் மான், ஒரு முன்னாள் நகைச்சுவை நடிகர், அரசியல் புதியவராக இருந்து 11 ஆண்டுகளுக்குள் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் முகமாக முக்கியமான பயணத்தைக் கொண்டவர். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவரது தொகுதியான துரியில் முன்னிலை வகிக்கும் பகவந்த் சிங் மான், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாவது முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

இவர், சங்ரூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்த சட்டமன்றத் தேர்தலில் துரி பகுதியிலிருந்து போட்டியிட்டார். சங்ரூரில் உள்ள சடோஜ் கிராமத்தில் ஒரு பள்ளி ஆசிரியரின் குடும்பத்தில் பிறந்த பகவந்த் சிங் மான், சுனமில் உள்ள ஷாஹீத் உதம் சிங் அரசு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது தனது முதல் ஆடியோ கேசட்டை வெளியிட்டு 18 வயதிலேயே புகழ் பெற்றார். சமூக மற்றும் அரசியல் கிண்டல்களில் தேர்ந்த அவர், ‘ஜுக்னு மஸ்த் மஸ்த்’ போன்ற நீண்டகாலம் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் வேகமாக மாநிலத்தின் நகைச்சுவை மன்னராக மாறினார்.

2011ம் ஆண்டு அகாலி தேசபக்தரும் 5 முறை முதல்வராக இருந்த பிரகாஷ் எஸ் பாதலின் மருமகனுமான மன்ப்ரீத் சிங் பாதலின் தூய்மையான அரசியலில் ஒரு சோதனையாக பஞ்சாப் மக்கள் கட்சியில் சேர, அவர் அக்கட்சியை விட்டு விலகியபோது பகவந்த் சிங் மானின் நகைச்சுவை கரியர் உச்சத்தில் இருந்தது. ஆனால், 2012 சட்டமன்றத் தேர்தலில், முன்னாள் முதல்வர் ராஜிந்தர் கவுர் பட்டலின் தொகுதியான லெஹ்ராகாகாவிலிருந்து அவர் முதன்முதலாகப் போட்டியிட்டார். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் பாதல் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்தபோது, ​​மான் உடன் செல்ல மறுத்து, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அழைப்பை ஏற்க முடிவு செய்தார். மற்றவை எல்லாம் நடந்தது வரலாறு. பகவந்த் சிங் மான் சங்ரூர் மக்களவைத் தொகுதியில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அகாலியின் மூத்த தலைவர் எஸ்.எஸ்.திண்ட்சாவைக் வெற்றிகொண்டு சாதனை படைத்தார்.

2017-ம் ஆண்டு பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் மிகவும் வெளிப்படையான முகமாக பகவந்த் சிங் மான் இருந்தார். பிரச்சாரத்தின்போது 300-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசினார். மேலும் பஞ்சாபி ‘கிக்லி-கலீர்’ மெட்டு பாடல்களை உருவாக்கினார். அதை பாதல் குடும்பத்தின் தலைமையை விமர்சித்து ஒரு மோசமான நையாண்டியாக மாற்றினார். அப்போது அகாலி தளம் ஆளும் கட்சியாக இருந்தது.

பின்னர், அகாலி தலைவர் பிக்ரம் எஸ் மஜிதியா மீது கெஜ்ரிவால் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் போதைப்பொருள் வர்த்தகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவதூறு வழக்கில் மன்னிப்பு கேட்டபோது, ​​​​மாஜிதியாவை வழக்கமாகக் குறைகூறிய பகவந்த் சிங் மான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

பஞ்சாப் மாநிலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தபோது, ​​​​சில சக எம்.பி.க்கள் அவர் குடிபோதையில் அவைக்கு வந்ததாக புகார் கூறியதால், பகவந்த் சிங் மான் நாடாளுமன்றத்தில் புகழ் பெற்றார். முன்னதாக, அவர் ஜனவரி, 2017-ல் பதிண்டாவில் நடந்த கூட்டத்தில் பார்வையாளர்களுக்கு ஃபிளையிங் முத்தங்களை கொடுத்த பிறகு, விழுந்தபோது கடும் கோபம் ஏற்பட்டது. ஆனால், 2019ம் ஆண்டில் புதிய தொடக்கமாக தனது நடத்தையை மாற்றிக்கொண்டார் என்று கட்சி கூறியது. கெஜ்ரிவால் பகவந்த் சின் மான் மது அருந்துவதை விட்டுவிட்டதாக உறுதியளித்தார் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால், இந்தத் தேர்தல், ஒரு நிதானமான மற்றும் கட்டுப்பாடான மனிதனைக் கண்டது – அவருடைய வாகனமான ஃபார்ச்சூனரின் பானட் அதிக சவாரிகள் செய்ய வில்லை, அவர் அதிக நகைச்சுவைகள் அல்லது கூட்டங்களுக்குள் மூழ்கவில்லை – ஊழல் கட்சிகளை வெளியேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற செய்தியை அவர் தனது ஷேரோ-ஷாயரி நாட்டுப்புற பாணியில் சேர்த்து தனது பேச்சுக்களை வைத்தார். ஒவ்வொரு தேர்தலிலும் மற்ற அரசியல்வாதிகளின் அவர்களின் மொத்த சொத்து மதிப்பு எப்படி அதிகரித்தது. ஆனால், அவருடைய சொத்து மதிப்பு எப்படி குறைந்தது என்பதை என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

சடோஜில் உள்ள அவரது வீட்டில் அவர் அரசியலில் வெற்றி பெற்றதற்கான எந்த அடையாளமும் இல்லை. அவரது தாயார், இல்லத்தரசி மற்றும் சகோதரி, ஒரு பள்ளி ஆசிரியை, இருவரும் அவர் முதல்வர் முகமாக அறிவிக்கப்பட்ட விழாவில் கட்சி ஊழியர்களிடம் பேசவில்லை. விவாகரத்தான பகவந்த் சிங் மான் – 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, ஒரு வருடம் கழித்து அவர் தனது மனைவியை விட்டுப் பிரிந்தார். அவர் தன்னை பஞ்சாபிற்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார். அவருக்கு அமெரிக்காவில் வசிக்கும் 16 மற்றும் 20 வயதில் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

அவரை டெல்லி தலைமையின் ரப்பர் ஸ்டாம்ப் என்று ஒதுக்கிவிடக்கூடாது என அவருக்கு நெருக்கமானவர்கள் எச்சரிக்கின்றனர். நண்பர்களும் எதிரிகளும் அவரை ஒரு சாதுர்யமான அரசியல்வாதியாகக் கருதுகிறார்கள். அதே நேரத்தில் கெஜ்ரிவால் கட்சியை வழிநடத்த நம்பகமானவராகவும் பணிவானவராகவும் காண்கிறார்.

பஞ்சாப் மாநில தேர்தலில், பகவந்த் சிங் மான், தங்கள் கட்சி அதிக பெரும்பான்மையைப் பெறும் என்று கூறி வருகிறார். “நாங்கள் கவலைப்படவில்லை, எங்களுக்கு 80-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும், மற்றவர்கல் உட்கார்ந்து கணக்கு போடுங்கள்” என்று கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.