1500 மைல்கள் பயணம்… பிரித்தானிய அரசால் உக்ரேனிய தாயாருக்கும் மகளுக்கும் எற்பட்ட ஏமாற்றம்


உக்ரைனில் போர் நெருக்கடியில் இருந்து தப்பி வந்த தாயார் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரையும் பிரித்தானியா நிர்வாகம் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளது.

உக்ரேனிய தாயாரான Tetyana Tsybanyuk மற்றும் அவரது மகள் Alena Semenova ஆகிய இருவரும் சுமார் 1,500 மைல்கள் பயணம் செய்து பிரித்தானிய எல்லையான கலேஸ் பகுதியில் வந்து சேர்ந்துள்ளனர்.

வேல்ஸ் பகுதியில் குடியிருந்துவரும் தங்கள் நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
ஆனால் விசா இல்லாமல் இருவரையும் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என பிரித்தானிய நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய துருப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் மிருகத்தனமான போரால் ஏற்பட்ட அகதிகள் நெருக்கடியை எதிர்கொள்ள பிரித்தானிய நிர்வாகத்தின் மந்தமான செயல்பாட்டுக்கு உள்விவகார அலுவலகம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மட்டுமின்றி, உக்ரேனிய அகதிகளுக்காக கடுமையான விசா விதிகளை விலக்கி எஞ்சிய ஐரோப்பிய நாடுகளைப் பின்பற்ற பிரித்தானியா தவறியுள்ளது என்ற விமர்சனமும் இதனால் முன்வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய படையெடுப்பு காரணமாக, பிரித்தானியாவுக்குள் நுழைய 22,000 மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில், வெறும் 957 விசா மட்டுமே உக்ரேனிய அகதிகளுக்காக வழங்கப்பட்டுள்ளதை நிர்வாகிகள் தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது.

உக்ரைனிய தலைநகர் கிவ்வை சேர்ந்த Tetyana Tsybanyuk மற்றும் அவரது மகள் Alena Semenova ஆகிய இருவரும் தாங்கள் அகதிகள் எனவும் புகலிடம் கேட்டு வந்துள்ளதாகவும் விளக்கமளித்தும் பிரித்தானிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

இருப்பினும் பிரன்சின் Brecon பகுதி அருகே, அப்பகுதி மக்களால் இவர்கள் இருவருக்கும் தங்கிக்கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் தங்கள் வாகனத்திலேயே இரவைக் கழிக்கும் இருவரும், போதிய பணம் கைவசம் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், பிரித்தானிய அரசு உக்ரைன் அகதிகளுக்காக விசா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதா என்பது தொடர்பில் நாளும் விசாரித்து வருவதாகவும் அவர்கள் கலக்கத்துடன் தெரிவித்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.