4மாநிலங்களில் பாஜக முன்னிலை: காலை 11 மணி அளவிலான முன்னணி நிலவரம்…

டெல்லி: நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாபில் தேசிய கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு ஆம்ஆத்மி ஆட்சியை கைப்பற்றுகிறது.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று காலை  வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 11மணி நிலவரப்படி, 

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மை பெற 202 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில்  பாஜக 254 இடங்களில் முன்னணியில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 118 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6  இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

117 தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில், அங்கு ஆம்ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் பாஜக 5  இடங்களிலும, சிரோன்மணி அகாலிதளம் 9 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

70 தொகுதிகளைக்கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 36 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், அங்கு பாஜக 44 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 22, பிஎஸ்பி 1 இடத்திலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் பெரும்பான்மை பெற 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அங்கு பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், ஆம்ஆத்மி ஒரு இடத்திலும் மற்றவை 3 இடங்களிலும்  முன்னணியில் இருந்து வருகிறது.

60 தொகுதிகளைக்கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை பெற 31 இடங்களில் வெற்றி பெற வேண்டியது உள்ளது. பாஜக 25 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 12  இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 11 இடங்களிலும்  மற்றவை 12 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

இங்கு அரசியல் பேரம் நடைபெற வாய்ப்பு உள்ளது. நாகா மக்கள் முன்னணி யாருக்கு ஆதரவு கொடுக்கிறதோ அந்த கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நாகா மக்கள் முன்னணி பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றுகிறது ஆம்ஆத்மி…. ! தேசிய கட்சிகள் ஓட ஓட விரட்டியடிப்பு…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.