ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின்போது காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன்கள் வைரல்

ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 41வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் குவிக்க, அதனை சேஸிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்தது.

@itsmeaziz07) April 25, 2024

9 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஆர்சிபி அணி ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் நேற்றைய போட்டியில் தோல்வியை தழுவியிருந்தாலும் 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்ற சன்ரைசர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

விராட் கோலி மீண்டும் சூப்பர் ஆட்டம்

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டும் சீராக இல்லாததே தொடர் தோல்விகளுக்கு காரணமாக இருந்தது. சன்ரசைர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த தவறை நிவர்த்தி செய்திருக்கிறது ஆர்சிபி அணி. ஐபிஎல் 2024 தொடங்கியது முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

) April 25, 2024

அடுத்தடுத்து விக்கெட்டுகள் ஒருமுனையில் விழுந்து கொண்டிருந்தபோது மறுமுனையில் நங்கூரம்போல் நிலைத்து நின்று கொண்டிருந்த விராட் கோலி 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

ஆர்சிபி அணியின் பேட்டிங் கம்பேக்

மிடில் ஆர்டரில் ரஜத் படிதார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 20 பந்துகளில் 50 ரன்கள் விளாசி அமர்களப்படுத்தினார். கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருந்த கேம்ரூன் கிரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அதேபோல் சேஸிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மா 31 ரன்கள் அடிக்க, ஷபாஸ் அகமது 40 ரன்கள் எடுத்தார். இவர்களை தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. 

காவ்யா மாறன் ரியாக்ஷன் வைரல்

April 26, 2024

இதனால் சன்ரைர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கடும் அதிருப்தி அடைந்தார். ஆர்சிபி அணியினர் பேட்டிங் ஆடும்போது சிக்சர்கள் அடித்தபோது சோகமாக அமர்ந்திருந்த அவர், சேஸிங்கில் சன்ரைசர்ஸ் பிளேயர்கள் விக்கெட் விடும்போது அதிருப்தியின் விளிம்புக்கே சென்றார். இதனை கேமரா மேன் அடிக்கடி ஜூம் செய்து காண்பித்துக் கொண்டே இருந்தார். போட்டி முடிந்ததும், காவ்யா மாறனின் ரியாக்ஷன்களை ஒரு கேலரியாகவே எடுத்து சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் போட்டுவிட்டனர். இப்போது, காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள் தான் சோஷியல் மீடியாவில் செம வைரலாக சென்று கொண்டிருக்கிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.